- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ராவையும், சிராஜையும் இந்த விடயத்திற்காக பாராட்டியே ஆகவேண்டும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது கடைசி இன்னிங்சில் 193 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய வேளையில் அந்த எளிய இலக்கை எட்ட முடியாமல் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்காரணமாக 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

பும்ராவையும், சிராஜையும் பாராட்ட வேண்டும் : ஆகாஷ் சோப்ரா

இந்த போட்டியின் கடைசி இன்னிங்சின் போது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினாலும் ஆல்ரவுண்டரான ஜடேஜா பின் வரிசையில் வந்த பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரை வைத்துக்கொண்டு வெற்றிக்காக போராடிய விதம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் பேட்டிங்கில் இவ்வளவு தூரம் பங்களிப்பை வழங்கியது பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்த கடைசி இன்னிங்சின் போது பத்தாவது வீரராக களமிறங்கிய ஜஸ்ப்ரீத் பும்ரா 54 பந்துகளையும், 11-ஆவது வீரராக களமிறங்கிய முகமது சிராஜ் 30 பந்துகளையும் சந்தித்து ரவீந்திர ஜடேஜாவிற்கு உறுதுணையாக நின்றனர். ஆனாலும் இறுதியில் சிராஜ் விக்கெட்டை இழக்கவே இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தது.

இந்நிலையில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பேட்டிங்கில் தங்களது முயற்சியை வெளிப்படுத்திய சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோரை இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் காண்பித்த செயல்பாடு பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் அவர்கள் இருவருமே கடைசி கட்டத்தில் நிறைய பந்துகளை சந்தித்து இங்கிலாந்து வீரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.

- Advertisement -

பொதுவாகவே அவர்கள் இருவரும் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்கள் என்று பார்க்கப்படும் வேளையில் பேட்டிங்கிலும் முடிந்த அளவு அவர்களது பெஸ்ட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள். பும்ரா இந்த போட்டியின் போது இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சில் சில அடிகளை உடம்பில் வாங்கினாலும் அவர்களுக்கு எதிராக உறுதியாக போராடினார்.

இதையும் படிங்க : லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அசத்தியதன் மூலம் மீண்டும் உச்சத்தை தொட்ட ஜோ ரூட் – விவரம் இதோ

அதேபோன்று முகமது சிராஜ் பந்துவீச்சில் எவ்வாறு தனது 100 சதவீதத்தை வழங்குகிறாரோ அதேபோன்று பேட்டிங்கிலும் இறுதிவரை தனது போராட்டத்தை வெளி காண்பித்தார். இப்படி பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் பேட்டிங்கில் காண்பித்த இந்த போராட்டத்தை பாராட்டியாக வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -