அந்த 2 பவுலர்களை விட சிராஜ் மோசமாகிட்டாரு? திடீர்னு சிராஜை ஏன் கழற்றி விட்டிங்க.. ஆகாஷ் சோப்ரா கேள்வி

Aakash Chopra
- Advertisement -

ராய்ப்பூரில் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இத்தனைக்கும் அப்போட்டியில் முதலில் விளையாடிய 359 ரன்களை இலக்காக நிர்ணயித்து. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 105, விராட் கோலி 102, கேப்டன் ராகுல் 66 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.

ஆனால் அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி சுமாராக பந்து வீசிய இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி 49.2 ஓவரில் இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றது. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை தென்னாப்பிரிக்கா சமன் செய்தது. மேலும் இத்தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு பதிலடியும் கொடுத்துள்ளது.

- Advertisement -

காணாமல் போன சிராஜ்:

அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் முறையே 70, 85 ரன்கள் வாரி வழங்கியது முக்கிய காரணமானது. இந்நிலையில் 2023 காலகட்டங்களில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முகமது சிராஜ் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்தார். ஆனால் திடீரென இந்திய அணி அவரை கழற்றி விட்டது ஏன்? என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சூப்பரா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சிராஜை விட ஹர்ஷித் ராணா, ப்ரசித் கிருஷ்ணா தரத்தில் சிறந்தவர்களா? என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “முகமது சிராஜுக்கு என்ன நடந்தது என்று உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. திடீரென அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடக்கூடிய வீரராக மாறியுள்ளதற்கான காரணத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை”

- Advertisement -

நியாயமான விமர்சனம்:

“டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் சிராஜின் ஆர்வம் மற்றும் விக்கெட்டுகளை எடுக்கும் திறமைப் பற்றி நாம் உயர்வாகப் பேசுகிறோம். ஆனால் எப்படி அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் காணாமல் போயுள்ளார்? தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் அவரை 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தேர்ந்தெடுக்காத போதே நாம் ஏமாற்றத்தைச் சந்தித்தோம். ஏனெனில் அதற்கு முந்தைய 2 வருடங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக சாதனை படைத்தார்”

இதையும் படிங்க: 4க்கு 4 தோல்வி.. 2 மோசமான சாதனை.. ராசியற்ற ருதுராஜை சதமடித்தாலே விடாமல் துரத்தும் சோகம்

“அப்படிப்பட்ட அவருடைய பெயர் தற்போது தவற விடப்பட்டுள்ளது. இங்கே பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷிட்ஜ் ராணா ஆகியோர் விளையாடும் நிலைமையில் முகமது சிராஜ் காணவில்லை. ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி டி20 கிரிக்கெட்டிலும் அவருக்கு என்னவாயிற்று? திடீரென அவர் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் வீரராக மாறியுள்ளார்?” என்று கூறினார்.

Advertisement