வாழ்வா – சாவா வாய்ப்பில் இதை செய்யலன்னா.. 2025 வரை காத்திருக்கணும்.. அபிஷேக்கிற்கு சோப்ரா அட்வைஸ்

Aakash chopra
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் தொடர் சமநிலையில் உள்ளது. முன்னதாக அந்த தொடரில் இளம் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா தடுமாற்றமாக விளையாடி வருவது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுக்கிறது.

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடியதால் கடந்த ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமான அவர் டக் அவுட்டானார். ஆனால் அடுத்த போட்டியிலேயே சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் அவர் அதன் பின் இதுவரை அரை சதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய 2 போட்டிகளே அபிஷேக் ஷர்மாவுக்கு கடைசி வாய்ப்பு என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வாழ்வா – சாவா வாய்ப்பு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் முதல் இரண்டு ஓவர்களிலேயே அவுட்டாகிறீர்கள். அப்படியானால் நீங்கள் அதிகமாக ஆக்ரோஷத்தில் விளையாடுகிறீர்கள் என்று அர்த்தம். அது கடந்த காலத்தில் வேலை செய்திருக்கலாம். ஆனால் தற்போது நீங்கள் மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கு கொஞ்சம் நேரம் கொடுத்து விளையாட வேண்டும்”

“இந்த வாய்ப்பை விட்டால் நீங்கள் அடுத்த ஐபிஎல் தொடர் வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில்அடுத்ததாக நாம் இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளோம். அதில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள். சஞ்சு சாம்சன் ஏற்கனவே தனது இடத்தை பிடித்துள்ளதால் நீங்க எங்கே விளையாடுவீர்கள்? எனவே இது உங்களுக்கு வாழ்வா – சாவா வாய்ப்பு என்று நான் சொல்வேன்”

- Advertisement -

சிறிய அட்வைஸ்:

“அபிஷேக் ஷர்மாவுக்கு இரண்டு போட்டிகள் மட்டுமே வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சஞ்சு சாம்சன் ஒரு ஓப்பனிங் இடத்தை எடுத்து விட்டார். கடந்த போட்டியில் அவர் டக் அவுட்டானாலும் அடுத்தடுத்த சதங்கள் அடித்துள்ளார். ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக விளையாடுவதை அபிஷேக் சர்மா தவிர்க்க வேண்டும். வங்கதேசத்துக்கு எதிராகவும் அவர் அப்படியே அவுட்டானார்”

இதையும் படிங்க: அட்டாக் செய்வாங்க.. சுமாரான ஃபார்மில் இருந்தாலும் அவர் ஆஸியை அடிச்சா இந்தியா ஜெய்க்கும்.. ஓ’கீபி பேட்டி

“அவரைப் பார்த்ததுமே எதிரணிகள் தற்போது பவுன்சர் பந்துகளை வீசுகின்றன. எனவே அது போன்ற பந்துகளில் தேர்ட் மேன் திசையில் சிங்கிள் எடுக்க முயற்சி செய்யுங்கள். கொஞ்சம் நேரம் கொடுத்து விளையாடுங்கள். ஏனெனில் உண்மையாக நீங்கள் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அடித்த சதத்தை தவிர்த்து இது வரை 3 – 4வது ஓவரை தாண்டி விளையாடவில்லை” என்று கூறினார்.

Advertisement