ஐபிஎல் போட்டி ஒளிபரப்ப அனுமதி கேட்கும் பிரபல தியேட்டர் Owner – யார் தெரியுமா ?

theater
- Advertisement -

11வது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் 7ம் மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது.முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மும்பை அணியுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளது.இரண்டாடுகளுக்கு பின்னர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி களமிறங்குவதால் மைதானத்தில் சென்னை அணி வீரர்களை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

IPL

- Advertisement -

இந்நிலையில் தியேட்டரில் திரைப்பட கட்டணங்களை குறைக்கக்கூறியும் மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் விஷால் தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் புதுப்படங்களை வெளியிடாமல் போராட்டம் செய்து வருகின்றனர்.இதனால் திரையரங்குகளில் பழைய படங்களையே மீண்டும் மீண்டும் திரையிட்டு வருகின்றனர். பல திரையரங்குகள் மூடப்பட்டும் உள்ளது.

இந்நிலையில் படுத்து கிடக்கும் தியேட்டர் தொழிலை நிமிர்த்தும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதிக்கோரி காவல் ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளதாக தியேட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய உதயம் தியேட்டர் மேலாளர் ஹரிஹரன் “தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திடும் போராட்டம் காரணமாக புதுப்படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாததால் தியேட்டர் தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் எப்போது முடியுமென்றும் தெரியவில்லை. எனவே தான் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளோம். காவல் துறையினர் அனுமதியளித்தால் அதன்பின்னர் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது” என்றார்.

Advertisement