20 வருடங்கள் கழித்தும் மாறாத லவ்.. ஜஹீர் கானுக்காக அன்புடன் வந்த ஸ்பெஷல் ரசிகை.. 90ஸ் ரசிகர்கள் வியப்பு

Zaheer Khan Fan
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. அதில் கோப்பையை வெல்வதற்காக பத்து அணிகளும் இப்போதே பயிற்சிகளை துவங்கியுள்ளன. அந்த வரிசையில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 27 கோடிகளுக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் தலைமையில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

அந்த அணிக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக ஜாம்பவான் ஜஹீர் கானும் லக்னோ அணியுடன் இணைந்துள்ளார். லக்னோ அணி நிர்வாகம் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த வரவேற்பு மத்தியில் ஒரு ரசிகை “ஜஹீர் ஐ லவ் யூ” என்று பதாகையில் எழுதி கையில் பிடித்துக் கொண்டு சிரித்த முகத்துடன் வரவேற்றார்.

- Advertisement -

மாறாத 20 வருட அன்பு:

அதைப் பார்த்த ஜகீர் கான் “நீங்கள் தானே அது” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் சென்றார். அதாவது இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் ரசிகைகள் உள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஹீர் கான் 2005ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

அந்தப் போட்டியில் ஒரு இளம் ரசிகை “ஜஹீர் ஐ லவ் யூ” என்ற பதாகையுடன் இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்தார். அப்போது அவரை ஃபோகஸ் செய்த கேமராமேன் அப்படியே ஜாகீர் கானையும் நேரலையில் காண்பித்தார். அதைப் பார்த்து ஜஹீர் கான் வெட்கத்துடன் சிரித்தார். அருகில் இருந்த யுவராஜ் சிங் “உங்கள் காதலை ஏற்றுக் கொண்டார்” என்ற வகையில் ஜகீர் கான் கையில் உயர்த்திக் காண்பித்து கலாய்த்தார்.

- Advertisement -

ரசிகர்கள் வியப்பு:

அதைப் பார்த்த அந்த ரசிகை வெட்கத்துடன் 2 கைகளால் முத்தமிட்டு காற்றில் பறக்க விட்டு பின்னர் முகத்தை மூடிக்கொண்டார். அதை களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த சேவாக்கும் பார்த்து புன்னகைத்தார். அந்த தருணம் இந்திய கிரிக்கெட்டில் ஒரு மறக்க முடியாத தருணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் நெஞ்சத்தில் அந்த தருணம் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

இதையும் படிங்க: ரோஹித்தின் வாரிசாக இருந்த பாண்டியாவை பிரிச்சுடாங்க.. இப்போ ரசிகர்கள் மனசார ஏத்துக்குவாங்க.. ஆகாஷ் சோப்ரா

அந்த சூழ்நிலையில் அதே ரசிகை தற்போது 20 வருடங்கள் கழித்து மாறாத அன்புடன் லக்னோ அணியின் ஆலோசகராக வந்த ஜஹீர் கானுக்கு “ஐ லவ் யூ” என்று பதாகையில் எழுதி அன்பை வெளிப்படுத்தினார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் “20 வருடங்கள் கழித்தும் இந்த ரசிகை மாறவில்லையா?” என்று வியப்பை வெளிப்படுத்துகின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement