வெளிநாட்டுப் பயணத்தின் போதும் ” மாட்டுச் சாணம் ” எடுத்துச் செல்லும் கிரிக்கெட் வீரர்..! – யார் தெரியுமா..?

makaya

விளையிட்டு வீரர்கள் பொறுத்த வரை ஒவ்வொருவருக்கும் ஒரு செண்டிமெண்ட் கண்டிப்பாக இருக்கும். ஆனால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகாயா நிடினி என்பவறின் செண்டிமெண்ட் கொஞ்சம் முகம் சுளிக்கும் வகையில் தான் இருக்கிறது.
Ntini
1977 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1998- 2011 கல் கால கட்டம் வரை தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடியவர். இவர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முதல் கறுப்பின வீரர் எனபதும் குறிப்பிடத்க்கது. தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர பந்துவீச்சாளாரான இவர், இதுவரை 101 டெஸ்ட், 173 ஒரு நாள் போட்டிகள் மற்றும் பத்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சிறுவயதில் வறுமை காரணத்தால்காலனிகளை வாங்குவதற்குக் கூட பணமில்லாமல் இருந்ததால், சிறுவயதில் மாடு மேய்த்து தான் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றியுள்ளார். அதன்பின் நண்பர்கள் உதவியாலும், தனது கடின முயற்சியாலும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி, தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்றார். இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 445 விக்கெட்களை பற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 390 விக்கெட்டுகளை பெற்று அதிக விக்கெட் குவித்த தென்னாபிரிக்கா வீரர்கள் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளார்.

தென் ஆப்பிரிக்க வீரர் நிடினிக்கு ஒரு வித்தியாசமான நம்பிக்கை இருந்துள்ளது. மகாயா நிடினி எந்த நாட்டுக்கு விளையாடச் சென்றாலும், தன்னுடன் ஒரு பிளாஸ்டிக் பையில் மாட்டுச் சாணத்தை எடுத்துச் செல்வது அவரின் பழக்கம். இது குறித்து அவர் விளக்கமளிகையில்”நான் ஒரு மிக சிறிய கிராமத்தில் தான் பிறந்து வள்ர்ந்தேன். அப்போது நான் மாடு மேய்த்துக் கொண்டிருந்தேன்.வறுமை காரணத்தால் என்னால் காலணிகளை வாங்க இயலவில்லை.
Ntini
வேலை செய்யும் போது மாட்டு சாணத்தின் மீது காலை வைத்து செல்வேன் அப்போது எனக்கு கத கதகதப்பாக இருக்கும். நான் தென்னாபிரிக்க அணியில் சேர்ந்த பின்னும் எந்த நாட்டிற்கு சென்றாலும் ஒரு பையில் மாட்டு சாணத்தை எடுத்துச் செல்வேன். நான் சரியாக விளையாடவில்லை என்றால் ஓய்வு அறைக்குச் சென்று நான் வைத்திருக்கும் மாட்டுச் சாணத்தை முத்தமிட்டு, முகர்ந்து பார்த்துக்கொள்வேன். அதை நான் ஒரு அதிர்ஷ்டமாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.