MI vs RR : ஆட்டநாயகன் விருது பெற்ற போதும் என் மனதில் ஒரு வருத்தம் உள்ளது – பட்லர்

ஐ.பி.எல் தொடரின் 27 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ரஹானே தலைமை

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 27 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Rahane 1

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக டி காக் 52 பந்துகளில் 81 ரன்களை குவித்தார். ரோஹித் 47 ரன்களை அடித்தார். பிறகு 118 ரன்கள் இலக்காக ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். இதில் 7 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். ஆட்டநாயகனாக பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Buttler

போட்டிக்கு பிறகு ஆட்டநாயகன் பட்லர் கூறியதாவது : இந்த மைதானத்தில் வந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவது மகிழ்ச்சி. கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்காக கஷ்டப்பட்டோம். அணியின் வெற்றிக்கு நான் பங்களித்து சிறப்பானது. கடந்த சில போட்டிகளாக நான் சிறப்பாக அடிவருகிறேன் என்றாலும் எனக்கு ஒரு வருத்தம் உள்ளது.

Buttler 1

அதுயாதெனில் அணியின் வெற்றிக்கு அருகில் வரும்போது நான் ஆட்டமிழக்கிறேன். இதனால் வெற்றிக்கு போராடவேண்டிய நிலையிலும், மாறுபட்ட முடிவுகளும் வருகிறது. எனவே, இனிமேல் முழு வெற்றி கிடைக்கும் வரை எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று பட்லர் கூறினார்.

Advertisement