கழற்றி விடப்பட்ட மைக் ஹெசன், சஞ்சு பங்கர் – 2024 ஐபிஎல் கோப்பை வெல்ல வெற்றிகரமான வெளிநாட்டு கோச்’சை நியமித்த ஆர்சிபி

Mike Hesson 2
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 தொடரில் எம்எஸ் தோனி தலைமையில் நடந்த சென்னை 5வது கோப்பையை வென்ற நிலையில் முதல் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மீண்டும் லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை கொடுத்தது. ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதலே அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்ற மகத்தானவர்கள் தலைமையில் 2009, 2011 சீசன்களில் ஃபைனல் வரை சென்று கோப்பையை வெல்ல முடியாத அந்த அணி விராட் கோலி தலைமையில் 2013 – 2021 வரை எவ்வளவோ போராடியும் 2016 ஃபைனலில் தோற்றதை போல இதுவரை சாம்பியன் பட்டத்தை தொட முடியாமல் தவித்து வருகிறது.

குறிப்பாக கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற தரமான வீரர்களுடன் லீக் சுற்றில் அபாரமாக செயல்படும் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றில் ஏதேனும் ஒரு தருணத்தில் சொதப்பி கோப்பையை எதிரணிக்கு தாரை வார்ப்பது வாடிக்கையாகி வருகிறது. அதனால் விமர்சனத்திற்குள்ளான விராட் கோலிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற டு பிளேஸிஸ் தலைமையிலும் கடந்த 2 வருடங்களாக விளையாடிய பெங்களூரு எந்த மாற்றத்தையும் சந்திக்காமல் அதே சொதப்பல்களை அரங்கேற்றுவதால் சூரியன் மேற்கே உதித்தாலும் நீங்கள் கோப்பையை வெல்லப் போவதில்லை என்ற கிண்டல்கள் உச்சகட்டமாக காணப்படுகின்றன.

- Advertisement -

புதிய கோச்:
இந்நிலையில் 2024 புத்தாண்டில் புதிய தன்னம்பிக்கையுடன் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி வெற்றி பெறுவதற்காக தங்களுடைய பயிற்சியாளர்கள் குழுவில் பெங்களூரு நிர்வாகம் அதிரடியான மாற்றத்தை செய்துள்ளது. குறிப்பாக 2019 முதல் இதுவரை இயக்குனராக இருந்த நியூசிலாந்தை சேர்ந்த மைக் ஹெசன் மற்றும் தலைமை பயிற்சியாளராக இருந்த முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கர் ஆகியோர் விடுவிக்கப்படுவதாக பெங்களூரு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு பதிலாக ஜிம்பாவே நாட்டைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் வீரர் ஆண்டி பிளவர் தங்களுடைய புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுவதாகவும் பெங்களூரு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

90களிலேயே ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டை அடித்து பிரபலப்படுத்திய ஆண்டி ப்ளவர் 273 சர்வதேச போட்டியில் 11580 ரன்களை எடுத்து அதிக ரன்கள் குவித்த ஜிம்பாப்வே வீரராக இப்போதும் சாதனை படைத்துள்ளார். அதை விட கடந்த 2020 முதலே உலகின் பல்வேறு டி20 தொடர்களில் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவத்தை கொண்ட அவர் தலைமை தாங்கிய அணிகள் 2021 பிஎஸ்எல் தொடரிலும் 2022 ஹண்ட்ரட் தொடரிலும் 2023 ஐஎல் டி20 தொடரிலும் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளன.

- Advertisement -

மேலும் 2020, 2021இல் கரீபியன் தொடர்களிலும் 2022, 2023 பிஎஸ்எல் தொடர்களிலும் அவர் தலைமை தாங்கிய அணிகள் ஃபைனல் வரை சென்று அசத்தின. மேலும் ஐபிஎல் தொடரில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்ட அவரது தலைமையில் அந்த அணி களமிறங்கிய 2 சீசன்களிலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. இருப்பினும் தற்போது அந்த அணிக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜஸ்டின் லேங்கர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டி பிளவர் பெங்களூரு அணியில் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்.

அதற்கு முன்பாகவே 2009 – 2014 வரையிலான காலகட்டங்களில் சர்வதேச அளவில் பயிற்சியாளராக செயல்பட்ட அவரது தலைமையில் 2010 டி20 உலக கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது. அப்படி சர்வதேச அளவில் நிறைய போட்டிகளில் விளையாடி வெற்றிகரமாக செயல்பட்ட அனுபவத்தையும் பயிற்சியாளராகவும் டி20 தொடர்களில் கோப்பைகளை வென்றுள்ள அனுபவத்தையும் நிறைந்த அவர் தங்களது அணியை வழி நடத்துவதற்காக வந்துள்ளது பெங்களூரு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க:கழற்றி விடப்பட்ட மைக் ஹெசன், சஞ்சு பங்கர் – 2024 ஐபிஎல் கோப்பை வெல்ல வெற்றிகரமான வெளிநாட்டு கோச்’சை நியமித்த ஆர்சிபி

அதே போல விராட் கோலி, டு பிளேஸிஸ் போன்ற அனுபவம் மிக்க மகத்தான வீரர்களுடன் இணைந்து பெங்களூரு கோப்பை வெல்வதற்கு உதவ தாமும் தயாராக இருப்பதாக ஆண்ட்டி ப்ளவர் கூறியுள்ளார். இதனால் அடுத்த வருடமாவது தங்களுடைய அணி கோப்பையை வேண்டுமா என்று எதிர்பார்ப்பு பெங்களூரு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement