இந்திய அணியின் இளம் முன்னணி துவக்க வீரரான கே.எல் ராகுல் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒரு லீக் போட்டியின் போது பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகையில் பீல்டிங் செய்யும் போது தடுமாறி கீழே விழுந்து காலில் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரின் பாதியிலே வெளியேறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் அப்படி ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கே.எல் ராகுல் வெளிநாடு சென்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக செய்து கொண்டார். பின்னர் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது சிறிய ஓய்வை எடுத்துக் கொண்ட கே.எல் ராகுல் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று அங்கு சிகிச்சை மற்றும் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார்.
தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் கே.எல் ராகுல் விரைவில் முழு உடற்தகுதி பெற்று இந்திய அணிக்கு திரும்புவார் என்றும் ஆசிய கோப்பை தொடரில் அவர் விளையாட அதிக வாய்ப்பு இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஏனெனில் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நடைபெற இருக்கும் வேளையில் ஆசிய கோப்பை தொடருக்காக அவர் தயாராகினால் தான் உலகக் கோப்பை அணியில் இடம் பெற முடியும் என்று பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் ராகுல் காயத்திற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் அவர் முழு உடற்தகுதியை எட்டுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவர் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று சில நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாக்கியுள்ளது.
இதையும் படிங்க : இந்திய அணியில் நான் மீண்டும் கம்பேக் கொடுக்க அவரே காரணம். அவ்ளோ சப்போர்ட் பண்ணாரு – யுவ்ராஜ் சிங் உருக்கம்
எனவே ஆசிய கோப்பை தொடரில் அவர் விளையாடவில்லை என்றால் நிச்சயம் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார். ஏனெனில் போதிய பயிற்சி இன்றி நேரடியாக எந்த வீரர்களையும் தேர்வுக்குழு தேர்வு செய்யாது என்பதன் காரணமாக அவர் உலகக்கோப்பை தொடரையும் தவறவிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுவது குறிப்பிடத்தக்கது.



