IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவங்க 2 பேரும் விளையாடுவாங்க – மூத்த அதிகாரி வெளியிட்ட தகவல்

Kuldeep Yadav Ind Shubman gill kl rahul
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது தற்போது நாடு திரும்பியுள்ளது. அடுத்ததாக ஜூலை மாதம் முதல் வாரத்தில் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

IND vs WI T20I

அப்படி ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, புஜரா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று ஏற்கனவே பேசப்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தோல்வியை சந்தித்த ரோகித் சர்மாவிற்கு டெஸ்ட் போட்டியிகளிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டடு வந்தது.

IND vs WI Nicholas Pooran Rohit Sharma

ஆனால் தற்போது பிசிசிஐ சார்பில் வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் : இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் ரோகித் சர்மா மற்றும் புஜாரா ஆகியோர் தொடர்ந்து விளையாடுவார்கள். அதே வேளையில் டி20 போட்டிகளை பொருத்தவரை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடம் இருக்காது.

இதையும் படிங்க : இந்திய அணியின் நிர்வாகத்தில் சேவாக்கிற்கு கிடைக்கப்போகும் மாபெரும் பதவி – குவியும் ஆதரவு

அவர்களுக்கு பதிலாக ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும். அந்த அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சில இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement