WTC Final : இறுதிப்போட்டியில் தமிழக வீரர் அஷ்வின் விளையாட வாய்ப்பே இல்ல. ஏன் தெரியுமா? – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியானது நாளை ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் நாளைய இந்த இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ள வேளையில் நிச்சயம் இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் தற்போது இந்த இறுதிப் போட்டிக்காக தயார்படுத்தப்பட்டுள்ள மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சார்களுக்கு சாதகமாக தயார்படுத்தப்பட்டுள்ளது. அதனை அஷ்வினுமே அவரது youtube சேனலில் தெரிவித்துள்ளார். அதன்படி மைதான பராமரிப்பாளர் கூறுகையில் : இந்த ஆடுகளம் முழுவதாக வேகப்பந்து வீச்சாளர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக நிச்சயம் இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடனே செல்லும். எனவே அப்படி ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே அணியில் இடம் பெற்றால் நிச்சயம் பேட்டிங்கில் கை கொடுக்கக்கூடிய ரவீந்திர ஜடேஜா தான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார்.

- Advertisement -

ஜடேஜா பேட்டிங்கில் மட்டுமின்றி பந்து வீச்சிலும் நிறைய ஓவர்களை தொடர்ந்து வீசும் திறன் உடையவர். எனவே நிச்சயம் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா தான் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த முறையே நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி இங்கிலாந்து மைதானத்தில் களமிறங்கியதால் தான் தோல்வியை சந்தித்தது என்று பேசப்பட்டது.

இதையும் படிங்க : WTC Final : இந்த காலத்துல இப்டி ஒரு பிளேயரா? மிட்சேல் ஸ்டார்க்கை பாராட்டும் இந்திய ரசிகர்கள் – காரணம் இதோ

எனவே நிச்சயம் இந்த முறையும் இந்திய அணி அந்த தவறை செய்யாமல் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் மட்டுமே செல்லும் என்பது உறுதி. அந்த வகையில் இந்திய அணி பிளேயிங் லெவனில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை மட்டுமே தேர்வு செய்தால் ரவீந்திர ஜடேஜா தான் அணியில் இருப்பார் என்பது உறுதி. ஆகையால் அஸ்வின் நாளைய போட்டியில் இடம்பெற வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement