நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 166 ரன்களை குவித்தது. பிறகு 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பிரிதிவி ஷா மற்றும் தவான் களமிறங்கினர். அப்போது முதல் ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே பிரிதிவி ஷா அஸ்வின் பந்தில் ராகுலிடம் கேட்சாகி சோகமாக வெளியேறினார். இதோ அந்த வீடியோ :
Ash sends back Shaw first ball https://t.co/oVivzBGogD via @ipl
— Siva.k (@sivakubendiran) April 2, 2019
நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக மில்லர் 43 ரன்களை குவித்தார்.
அதனை தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக 2.2 ஓவர்கள் வீசி 11 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.