நேற்றைய போட்டியில் சென்னை அணி வீரரான பிராவோ 16ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் டெல்லி அணி வீரரான இன்கிராமை பிராவோ ஆட்டமிழக்கச்செய்து வெளியேற்றினார். பிறகு அவருக்கே உரித்தான பாணியில் இன்கிராமை வழிஅனுப்பி வைத்தார் பிராவோ. இந்த வீடியோ தற்போது சென்னை ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :
????????????@DelhiCapitals 123/5 after 16.3 overs https://t.co/AWx9J47Cvh #VIVOIPL pic.twitter.com/DyQ0nj0yYC
— IndianPremierLeague (@IPL) March 26, 2019
நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. இதனால் சென்னை அணிக்கு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் பிராவோ 33 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிறகு ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 150 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் வாட்சன் 26 பந்துகளை சந்தித்து 44 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். மேலும், சென்னை அணியின் கேப்டன் தோனி 35 பந்துகளில் 32 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்