நேற்று சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான கேதார் ஜாதவ் நேற்று தனது 34 வது பிறந்தநாளை சென்னை அணி வீரர்களுடன் ஓய்வறையில் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தை சென்னை அணி நிர்வாகம் விடியோவாக எடுத்து சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ :
Cake shower for the birthday lion Adhaar Udhaar @JadhavKedar topped with the super win at Kotla! #WhistlePodu #Yellove #DCvCSK ???????? pic.twitter.com/COZgrueuAA
— Chennai Super Kings (@ChennaiIPL) March 26, 2019
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனிக்கு சமீபகாலமாக நெருங்கிய நண்பராக உள்ள ஜாதவ் அடிக்கடி தோனியுடன் குறும்பான செயல்களில் ஈடுபடுவதும் உண்டு. நேற்றைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தோனி ஜாதவின் உடல் முழுவதும் கேக்கை பூசியது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் ஜாதவ் 27 ரன்களை குவித்தார்.
நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. இதனால் சென்னை அணிக்கு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பிறகு ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 150 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் வாட்சன் 26 பந்துகளை சந்தித்து 44 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். மேலும், சென்னை அணியின் கேப்டன் தோனி 35 பந்துகளில் 32 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.