ஐ.பி.எல் துவக்க விழாவினை நிறுத்தி இந்திய ராணுவத்திற்கு பி.சி.சி.ஐ அளிக்க உள்ள தொகை – இத்தனை கோடியா ?

Prasad
- Advertisement -

இந்த ஆண்டு 12 ஆவது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் வரும் 23-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் துவங்கும் முன் துவக்க விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த முறை ஐபிஎல் தொடரின் துவக்கவிழா நடைபெறப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

Ipl cup

- Advertisement -

புல்வாமா தாக்குதலில் பலியான இராணுவத்தினர் குடும்பத்திற்கு இந்த தொகை அளிக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தது. ஆனால், இப்போது இந்த பணத்தில் பாதி தொகையை ஆயுதப்படை வீரர் நலனுக்காகவும் மற்றும் ராணுவ மேம்பாட்டிற்காகவும் வழங்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.

துவக்க விழா செலவிற்காக மொத்தமாக 20 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது பிசிசிஐ. அதில் 10 கோடி ரூபாய் முதலாவது போட்டியின்போது இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் மீதி பத்து கோடி ரூபாயில் ஆவது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பணம் சென்று அடையுமா என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

Ipl opening

ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு ரசிகர்களால் வரவேற்கப்பட்டன. இருப்பினும் பலியான ராணுவத்தின் குடும்பத்திற்கு எவ்வளவு தொகை அளிக்க போகிறது என்று தெளிவாக கூறவில்லை பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்கு பணம் சென்றடைந்தால் அதுவே போதும், அதுவே நன்மையும் கூட என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டபடி உள்ளனர்.

Advertisement