IND vs NZ : 2 ஓவரில் ஆட்டத்தின் முடிவையே மாற்றிய ஷர்துல் தாகூர். உண்மையிலே நீங்க லார்ட் தான் – ரசிகர்கள் பாராட்டு

Shardul Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது ஜனவரி 24-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நியூசிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்துள்ளது.

Rohit sharma IND vs NZ

- Advertisement -

அதன்படி இன்று நடைபெற்ற இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 385 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக துவக்க வீரர் ரோகித் சர்மா 101 ரன்களும், சுப்மன் கில் 112 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 386 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது துவக்கத்திலேயே முதல் ஓவரிலேயே அந்த அணியன் துவக்க வீரரை இழந்திருந்தாலும் அதன் பிறகு டேவான் கான்வேவின் சிறப்பான ஆட்டத்தினால் ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி நகர்ந்தது என்றே கூறலாம். 76 பந்துகளில் சதம் அடித்த கான்வே தொடர்ச்சியாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 138 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

Shardul Thakur 1

ஆனால் இந்த போட்டியின் திருப்புமுனையாக பார்க்கப்பட்டது ஷர்துல் தாகூர் எடுத்த மூன்று விக்கெட்டுகள் தான் இன்று ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். ஏனெனில் இந்த போட்டியின் 26-வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூர் டேரல் மிட்சலை 24 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார். அதன் பிறகு அடுத்த பந்தியிலேயே நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதமை டக் அவுட் ஆக்கினார்.

- Advertisement -

இதையும் படிங்க : 134 இன்னிங்ஸ்களுக்கு முன்னதாகவே ரிக்கி பாண்டிங்கின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்த – ரோஹித் சர்மா

அதுமட்டுமின்றி போட்டியின் 28-வது ஓவரில் அதிரடி வீரரான கிளென் பிலிப்ஸ்ஸை ஆட்டமிழுக்க வைத்தார். இப்படி இரண்டே ஓவரில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பினை பிரகாசப்படுத்திய ஷர்துல் தாகூரை ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement