இந்தியாவின் தொடர் தோல்வி.! இப்படிப்பட்ட வீரர்கள் தான் தேவை.! கோலி உருக்கம்

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் படு தோல்வியடைந்தது. அதே போல இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் தொடர் தோல்வி குறித்தும் இந்த தோல்வியிலிருந்து எப்படி வெளியேற போகிறோம் என்பதை குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

sad koli

- Advertisement -

சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள கோலி நாங்கள் எதைப்பற்றியும் இப்போது யோசிக்கவில்லை. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2வது டெஸ்ட்டில் போட்டியில்தான் முற்றிலும் நாம் வெளியேற்றப்பட்டுள்ளோம்.கடினமான சூழ்நிலையை எனக்குக் கொடுங்கள், நான் அணியை அதிலிருந்து மீட்பேன் என்று கையை உயர்த்திக் கூறும் வீரர்கள் தேவை. எல்லாம் நம் மனதில்தான் உள்ளது. வீரர்கள் அனைவரும் மனரீதியாகத் தயாராக வேண்டும். அப்படி இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் நன்றாக விளையாட முடியும்.

எனது முதுகு வலி இப்போது என்னை பாடாய் படுத்துகிறது. ஆனால், அடுத்த டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 4-5 நாட்கள் உள்ளன அதற்குள் நான் தயாராகி விடுவேன் என்று நம்புகிறேன். அணியில் பேட்டிங்கில் பங்களிப்பு அனைத்து பேட்ஸ்மேன்களும் கொடுக்கவேண்டும். சிறு பார்ட்னர்ஷிப் கூட அணியின் ரன் குவிப்பிற்கு கண்டிப்பாக உதவும். போட்டி தொடங்கும் போது அணைத்து வீரர்களும் கொஞ்சம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.களத்தில் இறங்கும் போது சொந்தமாக முடிவெடுக்க வேண்டும். கடந்த போட்டியில் நாங்கள் மோசமாக தோற்றுவிட்டோம்.

koli 2

அந்த தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன்.தவறுகளை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அந்த தவறில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறேம் என்பது தான் முக்கியம். நாங்கள் எங்கள் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோம். எனவே, இனி வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்’ என்று தெரிவித்துள்ளார் கோலி.மேலும் ரசிகர்களிடம் இந்திய அணி மீண்டு வரும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement