கொஞ்சம் பொறுங்க. தினேஷ் கார்த்திக்கை நாங்க முழுசா இன்னும் ஒதுக்கல – சேத்தன் சர்மா கொடுத்த விளக்கம்

Chetan-Sharma-and-Dinesh-Karthik
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் தற்போது அரையிறுதியை நோக்கி பயணித்து வரும் இந்திய அணியானது கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருந்து நேரடியாக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நவம்பர் 18-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

Rohit Sharma Dinesh Karthik Umesh Yadav

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின்னர் டி20 அணியில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஓரங்கட்டப்பட்டது அனைவரது மத்தியிலும் அதிகமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அதோடு இந்த உலகக் கோப்பை தொடரிலும் தினேஷ் கார்த்திக் இதுவரை பெரிய அளவில் இந்திய அணிக்கு பங்களிப்பை வழங்கவில்லை என்பதனால் அவர் இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட இருக்கிறார் என்றும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

அதோடு இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பிடிக்கவே வாய்ப்பு இல்லை என்றும் பல தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தினேஷ் கார்த்திக் ஏன் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை என்பதற்கான தெளிவான தகவல் ஒன்றினை கொடுத்துள்ளார். அதன்படி சேத்தன் சர்மா கூறுகையில் :

DInesh Karthik

இந்திய அணியின் வீரர்கள் தற்போது தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். எனவே அவர்களின் பணிச்சுமை மற்றும் வீரர்களின் உடற்தகுதி காரணமாகவும் அவர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சரியான சுழற்சியில் வீரர்கள் ஓய்வெடுத்து விளையாடினால் மட்டுமே அது அணிக்கு நலனாகவும் அமையும். அந்த வகையில் தான் நாங்கள் நியூசிலாந்து தொடருக்கான அணியை தேர்வு செய்துள்ளோம்.

- Advertisement -

அதேவேளையில் டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் எங்களது பட்டியலில் தான் இருந்தார். ஆனால் நாங்கள் அவரை தவிர்த்து வேறு வீரர்களை எடுப்பதற்கு காரணம் யாதெனில் : இனிவரும் போட்டிகளில் வெவ்வேறு வீரர்களை வைத்து இந்திய அணியின் காம்பினேஷனை மாற்றிப் பார்க்கலாம் என்ற ஒரு சோதனைக்காக தான் அவரை இந்த தொடரில் தேர்வு செய்யவில்லை. ஆனால் இன்னும் முற்றிலுமாக தினேஷ் கார்த்திக்கின் கதவுகள் அடைக்கப்படவில்லை.

இதையும் படிங்க : IND vs NZ : நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அதிகாரபூர்வ அறிவிப்பு – 16 பேர் கொண்ட லிஸ்ட் இதோ

அடுத்தடுத்து வரும் டி20 தொடர்களில் தினேஷ் கார்த்திக் தான் முன்னிலையில் இருக்கிறார் என சேத்தன் சர்மா தெளிவுபடுத்தி உள்ளார். ஆனாலும் இனிமேல் தினேஷ் கார்த்திக்-க்கு வாய்ப்பு வராது என்றும் அதனை இந்த தேர்வின் மூலமாக இந்திய அணி சொல்லாமல் சொல்லி உள்ளது என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Advertisement