ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி பெர்த் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் போடப்பட்டது.

இவ்வேளையில் இந்திய கிரிக்கெட் அணியானது முதலில் பேட்டிங் செய்யும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஒரே ஒரு மாற்றமாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களிலும் அபார வெற்றி பெற்றதன் காரணமாக இன்றைய போட்டியில் எந்தவித மாற்றமும் இன்றி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவ்வேளையில் பெர்த் மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் களமிறங்குவது நன்மையாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்ட ரோகித் சர்மா அணியில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை இணைத்துள்ளார்.
மற்றபடி வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் செய்யப்படவில்லை. டி20 உலக கோப்பை தொடரில் தீபக் ஹூடா விளையாட இருக்கும் முதல் போட்டியாக இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்றைய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : துவண்டு கிடக்கும் வெஸ்ட் இண்டீஸை தூக்கி நிறுத்த வரும் குட்டி சந்தர்பால் – ரசிகர்கள் மகிழ்ச்சி, காரணம் இதோ
1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூர்யகுமார் யாதவ், 5) தீபக் ஹூடா, 6) ஹார்டிக் பாண்டியா, 7) தினேஷ் கார்த்திக், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) புவனேஷ்வர் குமார், 10) முகமது ஷமி, 11) அர்ஷ்தீப் சிங்.



