நீங்க எப்படி வேணா இருங்க. எங்ககிட்ட ரன் அடிக்க இவர் இருக்காரு – தெ.ஆ அணிக்கு சவால் விடுத்த அக்சர் படேல்

Axar Patel Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தாங்கள் பங்கேற்ற 2 போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியினை பெற்றுள்ளது. குறிப்பாக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்திருந்த இந்திய அணியானது கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

INDvsRSA Cup

- Advertisement -

இன்னும் இந்திய அணிக்கு மூன்று போட்டிகள் மட்டுமே சூப்பர் 12 சுற்றில் எஞ்சியிருக்கும் வேளையில் இந்திய கிரிக்கெட் அணியானது அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு தற்போது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரேயான போட்டியை அடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியையும் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் நிச்சயம் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும்.

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி குறித்து தற்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடுவது குறித்த திட்டங்கள் குறித்து நாங்கள் ஏற்கனவே சில குறிப்புகளை எடுத்து வருகிறோம்.

- Advertisement -

நெதர்லாந்து போட்டிக்கு முன்னதாகவே தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதும் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகள் துவங்கி விட்டன. தென்னாப்பிரிக்க அணியில் நோர்க்கியா, ரபாடா, லுங்கி நெகிடி போன்ற அதிவேக பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக ரன்களை குவிக்க சிறப்பான ஃபார்மில் எங்களிடம் விராட் கோலி இருக்கிறார். அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று அக்சர் பட்டேல் கூறினார்.

இதையும் படிங்க : கழுதைகளை கூட்டிகிட்டு போயிருந்தால் கூட வென்றிருக்கலாம் – பாகிஸ்தான் டீமை சாடும் முன்னாள் பாக் வீரர்கள்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஆஸ்திரேலியா மைதானங்களில் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் அதிகமாக இருப்பதினால் அதற்கு ஏற்றார் போலவும் எங்களது திட்டங்களை வகுத்து வருகிறோம். எனவே எங்களிடம் எந்தவித பயமோ, தயக்கமோ கிடையாது என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement