சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை முறியடித்த பாபர் அசாம் – விவரம் இதோ

Babar-Azam-and-Virat-Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி ரன் மெஷினாக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கும் மேல் சராசரி வைத்து விளையாடும் அவர் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் தற்போது அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கோலியின் சாதனைகளை அவ்வப்போது முறியடித்து வருகிறார்.

Babar Azam 1

- Advertisement -

அந்த வகையில் தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது அங்கு முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் மோதி வரும் இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்று இன்று இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் அரை சதம் விலாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார்.

Babar Azam

அதன்படி நேற்றைய போட்டியில் 40 பந்துகளை சந்தித்த பாபர் அசாம் 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை அதிவேகமாக அடித்த ஆசிய வீரர் என்ற விராட் கோலியின் மாபெரும் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

- Advertisement -

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 11000 ரன்களைத் தொட 261 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டார். ஆனால் தற்போது பாபர் அசாம் அவருக்கு 10 இன்னிங்ஸ்களுக்கு குறைவாகவே 251-வது இன்னிங்ஸ்லயே அந்த மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் கூட பழகினால் இப்படி ஆகும், நியூஸிலாந்தை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணமும் வீடியோவும் உள்ளே

பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான அணியின் வெற்றிக்கு முக்கிய நபராக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement