இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக துவங்கியதால் இரு அணிகளும் தலா 40 ஓவர்கள் வரை மட்டுமே விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியானது முதலில் பந்து வீசும் என இந்திய அணியின் கேப்டன் ஷிகார் தவான் அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கிளாசன் 74 ரன்களையும், டேவிட் மில்லர் 75 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது துவக்கத்திலேயே தவான் மற்றும் கில் என அடுத்தடுத்து ஓப்பனர்களை இழந்தது. பின்னர் இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஓரளவு சுதாரித்து விளையாடினாலும் அவர்கள் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. ஆனால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.

அதிலும் குறிப்பாக சஞ்சு சாம்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 63 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். இருந்தாலும் 40 ஓவர்களின் முடிவில் இந்திய அணியால் எட்டு விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றியை ருசித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் தவான் கூறுகையில் :
இந்த போட்டியில் எங்களது அணி வீரர்கள் விளையாடிய விதம் பெருமையாக இருக்கிறது. ஆனாலும் சேசிங்கின் போது எங்களுக்கு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். துவக்கத்திலேயே நல்ல பாட்னர்ஷிப் இருந்திருந்தால் இலக்கை துரத்தி இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அதே போன்று நல்ல டர்ன் மற்றும் பவுன்ஸ் இருக்கும் இந்த மைதானத்தில் பந்துவீச்சில் நாங்கள் நிறைய ரன்கள் கொடுத்து விட்டோம்.
இதையும் படிங்க : 2022 ஐசிசி டி20 தொடரில் கடைசியாக விளையாடுபவர்களாக கருதப்படும் 5 வீரர்களின் பட்டியல்
அதுவும் மிகப்பெரிய தவறு. அதே போன்று பீல்டிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை அதுவும் ஒரு தவறு. இப்படி பல தவறுகள் இந்த போட்டியில் நிகழ்ந்துவிட்டன. இருந்தாலும் இது போன்ற போட்டிகள் எங்களுக்கு கற்றுக்கொள்ள நிறைய விடயங்களை தருகிறது என தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.



