இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பின்னர் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று கோட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் துவங்குகிறது.

அதன்படி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறும் முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான டி20 அணியிலிருந்து தீபக் ஹூடா, முகமது ஷமி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக சபாஷ் அகமது மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் களம் இறங்குவது உறுதி. மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் விளையாடுவார்கள். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ள நிலையில் ஆறாவது பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அதே போன்று இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் பட்டேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் விளையாட வாய்ப்பு உள்ளது. மேலும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதன்படி நாளைய தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : IND vs RSA : இந்தியா தென்னாபிரிக்கா டி20 தொடர் எத்தனை மணிக்கு துவங்குகிறது? – எந்த சேனலில் பார்க்கலாம்?
1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) தினேஷ் கார்த்திக், 6) ரிஷப் பண்ட்/ஷ்ரேயாஸ் ஐயர், 7) அக்சர் படேல், 8) பும்ரா, 9) ஹர்ஷல் பட்டேல், 10) அர்ஷ்தீப் சிங், 11) யுஸ்வேந்திர சாஹல்.



