அடுத்தடுத்த தோல்விகள். ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் குறித்து பேசிய சவுரவ் கங்குலி – என்ன சொன்னாரு தெரியுமா?

Ganguly
- Advertisement -

ஆசியக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து அந்தத் தொடரை இழந்த வேளையில் தற்போது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் அடித்தும் தோல்வியை சந்தித்துள்ளது அணியின் மீதும், அணி தேர்வு மீதும் பெரிய அளவில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Rohit Sharma Dinesh Karthik Umesh Yadav

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் சமீபத்திய தோல்விகள் குறித்தும், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்தும் சவுரவ் கங்குலி சில கருத்துக்களை கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில் :

கடந்த இரண்டு மூன்று போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் இந்திய அணி டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை நல்ல நிலையில்தான் உள்ளது. ரோகித் சர்மாவின் வெற்றியின் சதவீதத்தை பாருங்கள். அவரது வெற்றி சதவீதம் 82 ஆக இருக்கிறது. 35 போட்டியில் மூன்று போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளார்.

Rohit Sharma IND

ரோஹித் மற்றும் டிராவிட் ஆகியோர் அணியை பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர் என்பது எனக்கு தெரியும். இரண்டு மூன்று தோல்விகளை பற்றி நான் கவலைப்படவில்லை. நிச்சயம் இந்திய அணி இந்த சரிவில் இருந்து மீண்டு வரும் என நம்புவதாக சவுரவ் கங்குலி கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

இதையும் படிங்க : மறுபடியும் சொல்றேன், அவர ஈஸியா அடிப்பாங்க – ஆபத்து காத்திருக்கு, இந்தியாவை எச்சரிக்கும் சல்மான் பட்

டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி நிச்சயம் ஒரு அங்கம் வகிப்பார் என்றும் அவரது பார்ம் கண்டிப்பாக டி20 உலக கோப்பையிலும் தொடரும். அவரது ஆட்டம் தற்போது சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார். உலகக் கோப்பைக்கு சில வாரங்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி அங்கு சிறப்பான முறையில் போட்டிகளில் பங்கேற்க தயாராகும் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement