தோனியை போன்றே இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். இந்திய ஆல்ரவுண்டரை பாராட்டிய – ராபின் உத்தப்பா

Robin-Uthappa
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்திருந்த வேளையில் நேற்று முன்தினம் துபாய் சர்வதேச மைதானத்தில் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று முடிந்தது.

IND vs PAK Babar Azam Rohit Sharma

- Advertisement -

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 147 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணியானது 148 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

முதலில் பந்து வீசுகையில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பாண்டியா பேட்டிங்கில் இறுதிவரை ஆட்டமிஷக்காமல் களத்தில் இருந்து 33 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு மட்டுமின்றி ஆட்டநாயகன் விருதினையும் பெற்றிருந்தார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த அவர் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்ததிலிருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

அவரது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து தற்போது பல்வேறு வீரர்களும் பாராட்டுகளை தெரிவித்து வரும் வேளையில் தற்போது சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ராபின் உத்தப்பா ஹார்டிக் பாண்டியாவை தோனியுடன் ஒப்பிட்டு பேசி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தோனியை போன்று போட்டியை முடித்து கொடுக்க வேண்டும் என ஹார்டிக் பாண்டியா நினைக்கிறார்.

- Advertisement -

அந்த நோக்கத்தில் தான் பாண்டியா பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியை சிக்சருடன் முடித்துக் கொடுத்திருப்பார். அதுமட்டுமின்றி பாண்டியா தோனியை மிகவும் நேசிக்கக் கூடிய ஒருவர். தோனியை அருகில் இருந்து கவனித்து உற்று நோக்கியதால் தோனியிடம் இருந்து கற்றுக் கொண்ட விடயங்களை அப்படியே தானும் சர்வதேச கிரிக்கெட்டில் பிரதிபலிக்க வேண்டும் என்று பாண்டியா விரும்புகிறார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் தோல்வியே அடையாமல் கோப்பையை வென்ற 6 கேப்டன்களின் பட்டியல்

அந்த வகையில் தான் தோனியை போன்று சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துக் கொடுக்க பாண்டியா முயற்சித்திருக்கிறார். அதோடு கிரிக்கெட் களத்தை தாண்டி பாண்டியா தோனியிடம் நல்ல நட்பு வைத்திருக்கிறார். மேலும் களத்தில் தான் தோனியை போன்று திறம்பட செயல்பட வேண்டும் எனவும் பாண்டியா நினைப்பதாக ராபின் உத்தப்பா பாராட்டினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement