ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் தோல்வியே அடையாமல் கோப்பையை வென்ற 6 கேப்டன்களின் பட்டியல்

Rohith
- Advertisement -

ஆசிய கண்டத்து கிரிக்கெட் அணிகளின் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை 15ஆவது முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரின் கோப்பையை வெல்வதற்கு நடப்புச் சாம்பியன் இந்தியா உட்பட 6 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பொதுவாகவே இந்த தொடர் ஆசிய கண்டத்தின் நாடுகளில் நடைபெறுவதால் அதைச் சேர்ந்த நாடுகள் அதைப்பற்றிய கால சூழ்நிலைகளையும் அந்த சமயத்தில் எதிரணியின் பலத்தையும் தெரிந்து வைத்திருக்கும் என்பதால் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்கு எப்போதுமே கடுமையான போட்டிகள் நிலவும்.

அந்த வகையில் ஆசிய கோப்பை போன்ற எந்த ஒரு பெரிய தொடர்களிலும் ஒரு அணியில் பலம் பலவீனம் இருக்கும் என்பதால் ஒருசில தோல்விகளைச் சந்தித்தாலும் அதை பெரிய போட்டிகளுக்கு முன்பாக சரி செய்து கொண்டு முக்கிய தருணங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டியில் அற்புதமாக செயல்பட்டு கோப்பையை வெல்வது வழக்கமான ஒன்றாகும்.

- Advertisement -

வெற்றி கேப்டன்கள்:
ஆனால் எப்போதாவது தான் ஒரு கேப்டன் தலைமையில் அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் தரமானவர்களாக அமைந்து முதல் லீக் போட்டியிலிருந்து கொஞ்சமும் சிந்தாமல் சிதறாமல் ஆரம்பம் முதல் இறுதிப் போட்டி வரை சிறப்பாக செயல்பட்டு அதிரடியாக கோப்பையை வெல்வார்கள். அந்த வகையில் ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் முதல் போட்டியிலிருந்து இறுதிப் போட்டி வரை தோல்வியே அடையாமல் கோப்பையை வென்ற கேப்டன்களை பற்றி பார்ப்போம்:

1. சுனில் கவாஸ்கர்: கடந்த 1984இல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற வரலாற்றின் முதல் ஆசிய கோப்பையில் இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மட்டுமே பங்கேற்றனர்.

- Advertisement -

முதல் தொடர் என்பதால் பைனல் அல்லாமல் வெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வைத்து வெற்றியாளர் நிர்ணயிக்கப்பட்ட அந்த தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக களமிறங்கிய 2 போட்டிகளிலும் தோல்வியடையாமல் வென்ற சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்தியா புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது. அந்த வெற்றிக்கு 107 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சுரீந்தர் கண்ணா தொடர் நாயகன் விருதை வென்றார்.

2. அர்ஜுனா ரணதுங்கா: 1996இல் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து முதல் சாம்பியன் பட்டம் வென்ற புத்துணர்ச்சியுடன் இருந்த ரணதுங்கா தலைமையிலான இலங்கை 1997இல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகளை லீக் சுற்றில் தோற்கடித்து அசத்தியது.

- Advertisement -

அதன்பின் நடந்த மாபெரும் இறுதிப் போட்டிக்கு வந்த இந்தியாவை மீண்டும் தோற்கடித்த அந்த அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த தொடரில் கேப்டனாக வழிநடத்திய ரணத்துங்கா அதிகபட்சமாக 272 ரன்கள் குவித்து தோல்வியே அடையாமல் வெற்றி பெற உதவினார்.

3. மொய்ன் கான்: கடந்த 2000ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் களமிறங்கிய மொய்ன் கான் தலைமையிலான பாகிஸ்தான் வங்கதேசம், இந்தியா, இலங்கை ஆகிய அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்து வெற்றி நடை போட்டது.

- Advertisement -

பின்னர் நடந்த இறுதிப் போட்டியிலும் இலங்கையை தோற்கடித்த அந்த அணி கடைசிவரை தோற்காமல் முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. அந்த தொடரில் அதிக பட்சமாக யூசுப் யுகானா 295 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

4. ஏஞ்சேலோ மேத்தியூஸ்: 2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கையை வழிநடத்திய அஞ்சலோ மேத்யூஸ் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளை தோற்கடித்து புள்ளி பட்டியலில் 17 புள்ளிகளுடன் தோல்வியே அடையாமல் முதலிடம் பிடித்து பைனலுக்கு சென்றது.

கடைசியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த அந்த அணி 5வது கோப்பையை வென்றது. அந்தத் தொடர் முழுவதும் 279 ரன்கள் அதிகபட்சமாக குவித்த லகிரு திரிமன்னே தொடர் நாயகன் விருதை வென்றார்.

5. எம்எஸ் தோனி: 2016இல் வங்கதேசத்தில் முதல் முறையாக 20 ஓவர் தொடராக நடைபெற்ற ஆசிய கோப்பையில் களமிறங்கிய ஜாம்பவான் தோனி தலைமையிலான இந்தியா வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகிய 4 அணிகளையும் தோற்கடித்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அதன்பின் நடந்த இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா கடைசி வரை தோல்வியடையாமல் 6வது கோப்பையை வென்றது.

6. ரோஹித் சர்மா: கடைசியாக கடந்த 2018இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளை தோற்கடித்து சூப்பர் 4 சுற்றிலும் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை சாய்த்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

அதன்பின் நடந்த மாபெரும் இறுதி போட்டியில் மீண்டும் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கடைசிவரை தோற்காமல் 7வது கோப்பையை வென்றது. அந்த தொடரில் 342 ரன்கள் குவித்த ஷிகர் தவான் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

Advertisement