ஆசிய கோப்பை 2022 : செப்டம்பர் 11இல் நடைபெறும் மாபெரும் பைனலுக்கு தகுதி பெற தகுதியான 3 அணிகளின் பட்டியல்

Asia Cup
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கியது. விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 2016க்குப்பின் 20 போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரின் கோப்பையை வெல்வதற்கு 6 ஆகிய அணிகள் போட்டி போடுகின்றன. டி20 உலகக் கோப்பையில் தங்களது நாட்டுக்காக விளையாடும் தரமான வீரர்களை அந்தந்த அணி நிர்வாகங்கள் இந்த தொடரிலிருந்து இறுதி கட்டமாக தேர்வு செய்ய உள்ளன. அதனால் தங்களது நாட்டுக்காக வெற்றி பெறுவதற்கும் அணியில் இடத்தைப் படிப்பதற்கும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் முழு மூச்சுடன் முழு திறமையை வெளிப்படுத்தி போராட உள்ளதால் இந்த தொடர் பரபரப்பாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.

asia-cup-logo

- Advertisement -

இந்த தொடரின் லீக் சுற்றில் தலா 2 போட்டிகளில் பங்கேற்று அதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற உள்ளன. அதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 11ஆம் தேதியன்று துபாயில் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அந்த 2 இடங்களுக்கு தகுதி பெறுவதற்கு தகுதியான 3 பலமான அணிகளை பற்றி பார்ப்போம்.

1. இந்தியா: ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று கடைசியாக நடந்த 2018 ஆசிய கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் எதிரணிகளை சாய்த்து தோல்வியே அடையாமல் வெற்றிநடை போட்டு வருகிறது. அவரது தலைமையில் முன்பைவிட அதிரடியாக விளையாடும் யுத்தியை கையிலெடுத்துள்ள இந்தியாவுக்கு சமீப காலங்களில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு அபாரமாக செயல்பட்டதால் பெஞ்சில் இருக்கும் வீரர்களும் பலத்தை சேர்க்கின்றனர்.

IND vs WI India Champions

ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்பி மேலும் பலத்தை சேர்க்கும் நிலையில் பார்மில் இல்லை எனக் கருதப்படும் விராட் கோலி, ராகுல் போன்றவர்கள் உலக தரமானவர்கள் என்பதால் எப்போது வேண்டுமானாலும் பெரிய ரன்களை எடுப்பார்கள். அவர்களுடன் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா இல்லை என்றாலும் புவனேஸ்வர் குமார், சஹால் போன்றவர்களால் அனைத்து துறைகளிலும் வலுவாக இருக்கும் இந்தியா இந்த ஆசிய கோப்பையில் லீக், சூப்பர் 4 சுற்றை கடந்து முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை தக்க வைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

2. பாகிஸ்தான்: இந்த தொடரில் இந்தியாவுக்கு சவால் கொடுக்கும் அணியாகவும் 2வது பலமான அணியாகவும் பாகிஸ்தான் திகழ்கிறது. என்னதான் ஷாஹீன் அப்ரிடி விலகினாலும் இதர அணிகளின் பலத்தை பார்க்கும்போது அதை சமாளிக்கும் அளவுக்கு பாகிஸ்தானிடம் திறமையான வீரர்கள் இப்போதும் உள்ளனர். குறிப்பாக பேட்டிங்கில் பாபர் அசாம், ரிஸ்வான், பகார் ஜமான் போன்றவர்களே பெரும்பாலான போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக்கொடுக்கும் திறமையும் தகுதியும் பெற்றுள்ளனர்.

Pakistan

அதேபோல் பந்துவீச்சில் ஹாரீஸ் ரவூப், கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட ஹசன் அலி, சடாப் கான் போன்றவர்கள் நல்ல திறமையும் அனுபவமும் பெற்றுள்ளார்கள். அந்த அணிக்கு இந்தியாவைத் தவிர சவால் கொடுக்கும் அளவுக்கு எதிரணிகள் கிடையாது என்றும் கூறலாம். எனவே நிச்சயமாக இம்முறை இறுதிப் போட்டியில் விளையாடும் ஒரு அணியாக பாகிஸ்தான் இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

3. ஆப்கானிஸ்தான்: ரசித் கான், முகமத் நபி, முஜீப் உர் ரஹ்மான் போன்றவர்களால் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கே சவால் கொடுக்கும் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சை ஆப்கானிஸ்தான் கொண்டுள்ளது. மேலும் பேட்டிங்கில் ஜாட்ரான், குர்பாஸ், ஹசரதுல்லா போன்றவர்கள் அதிரடியாக பேட்டிங் செய்யும் இளம் வீரர்களாக வலம் வருகின்றனர். வேகப் பந்து வீச்சிலும் பரூக்கி, நவீன்-உல்-ஹக் போன்ற இளம் பந்துவீச்சாளர்கள் துடிப்பும் திறமையும் கொண்டுள்ளனர்.

Afg

அதனால் நல்ல திறமையும் இளமையும் கலந்துள்ள ஆப்கானித்தான் நிச்சயமாக இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கடுமையாக போராடும் என்று நம்பலாம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக முதல் போட்டியிலேயே இலங்கையை 105 ரன்களுக்கு சுருட்டி அதை வெறும் 10 ஓவரில் அசால்ட்டாக சேசிங் செய்ததை கூறலாம். எனவே வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் போன்ற அணிகளை நிச்சயம் தோற்கடிக்கும் அணியாக ஆப்கானிஸ்தான் திகழ்கிறது.

மறுபுறம் சமீபத்தில் ஜிம்பாப்வேவிடம் 2 – 1 என்ற கணக்கில் தோல்வியடைந்து இத்தொடருக்கு வரும் வங்கதேசம் ஒரு சில வெற்றிகளை பெற்றாலும் இறுதிப் போட்டியில் விளையாடும் அளவுக்கு பலமாக இல்லை. அதேபோல் இலங்கையில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது இலங்கைக்கு பின்னடைவாகும்.

David Warner SL vs AUS

ஏனெனில் அணி முழுவதும் தரமான வீரர்களை கொண்டிருக்காத அந்த அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் சாய்த்த நிலையில் துபாயில் ஆப்கானிஸ்தானிடமே படுதோல்வி அடைந்தது. மேலும் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய 2 சாம்பியன் அணிகளை தோற்கடித்து ஹாங்காங் லீக் சுற்றை தாண்டுவதும் கடினமாகும்.

Advertisement