IND vs PAK : இன்றைய போட்டியில் களமிறங்குவதன் மூலம் ஜோடியாக சாதனை படைக்கவுள்ள – ரோஹித் அன்ட் கோலி

Rohit-and-Kohli
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ஆகஸ்ட் 27-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் ஆசிய கோப்பை தொடரானது கோலாகலமாக துவங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து எதிர்பார்ப்புக்கு சற்றும் குறைவின்றி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன.

INDvsPAK

- Advertisement -

கடந்தமுறை இவ்விரு அணிகளும் டி20 உலகக்கோப்பை தொடரில் மோதிய போது இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இம்முறை பாகிஸ்தான் அணியை வீழ்த்த இந்திய அணி தீவிரமாக தயாராகியுள்ளது. அதுமட்டும் இன்றி எப்போதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

அந்தவகையில் இம்முறையும் அதே ஆவலை இந்த போட்டியும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடப் போகும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஜோடியாக சாதனை பட்டியலில் இணைய காத்திருக்கின்றனர்.

Rohith

அந்த வகையில் ஏற்கனவே இதுவரை ரோகித் சர்மா கடந்த 2008, 2010, 2012, 2014, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் இதுவரை ரோகித் சர்மா 6 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடியுள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்பதன் மூலம் ஏழாவது முறையாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துவிடுவார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான டாஸின் போதே ரோகித் சர்மா இந்த சாதனை பட்டியலில் இணைவார். அதே போன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னணி வீரருமான விராட் கோலி கடந்த 2010-ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 99 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இதையும் படிங்க : அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்த கபில் தேவ் – ஆசிய கோப்பையில் களமிறங்கும் விராட் கோலி பற்றி கூறியது இதோ

இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் களமிறங்கும் போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நூறாவது டி20 போட்டியில் விளையாடுவார். அதே வேளையில் இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையும் அவர் இன்று படைக்க காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement