பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க. இந்திய அணிக்கு – ஸ்டைரிஸ் எச்சரிக்கை

Scott-Styris
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஹாங்காங் என ஆறு அணிகள் மோதும் ஆசியக் கோப்பை தொடரானது ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. எப்போதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழும்.

INDvsPAK

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கிட்டத்தட்ட உலகக் கோப்பை போட்டிக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை பழி தீர்க்க காத்திருக்கிறது. ஏனெனில் கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையின் போது இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அதிர்ச்சி அளித்திருந்தது.

அதற்கு தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்த வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஸ்காட் ஸ்டைரிஸ் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Rizwan

தற்போது உள்ள இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் மிகவும் வலிமையானது. இந்திய அணி அதிரடியாக விளையாடினாலும் போட்டியை எப்படி அணுகுவது என்ற தெளிவு அவர்களிடம் இல்லை. அதே வேளையில் பாகிஸ்தான் அணியின் துவக்க ஜோடியை பிரிப்பது இந்திய அணிக்கு சவாலாக இருக்கப் போகிறது.

- Advertisement -

எனவே இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை நம்பாமல் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து பாகிஸ்தான் அணியின் துவக்க ஜோடியை பிரிக்க வேண்டும். அதுமட்டும் இன்றி சுழற்பந்து வீச்சாளர்களை நம்பினால் அது பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறும். எனவே பாகிஸ்தான் அணியின் துவக்க ஜோடியை விரைவில் பிரித்தால் இந்திய அணிக்கு வெற்றி சாதகமாகும் என ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : இந்த தொடரில் உடைக்க வாய்ப்புள்ள 6 ஆசிய கோப்பை சாதனைகளின் பட்டியல் இதோ

அதுமட்டும் இன்றி இந்திய அணியின் வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பான ஃபார்மில் இருப்பதாலும் அதிரடியாக ஆடக்கூடியவர்கள் என்பதனாலும் தடுப்பாட்டத்தை மட்டும் கையில் எடுக்கக் கூடாது எனவும் தேவைப்படும் நேரத்தில் ரன் ரேட்டை உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் ஸ்டைரிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement