ஆசிய கோப்பை 2022 : இந்த தொடரில் உடைக்க வாய்ப்புள்ள 6 ஆசிய கோப்பை சாதனைகளின் பட்டியல் இதோ

Asia Cup
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 2022 ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. துபாய் மற்றும் சார்ஜா ஆகிய மைதானங்களில் நடைபெறும் இந்த தொடரின் கோப்பையை வெல்ல 7 கோப்பைகளை வென்று நடப்புச் சாம்பியனாக திகழும் இந்தியா, 5 கோப்பைகளை வென்ற இலங்கை, 2 கோப்பைகளை வென்ற பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் மோத உள்ளன. கடந்த 1984 முதல் 2 வருடத்திற்கு ஒருமுறை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக நடைபெற்று வரும் இந்த தொடர் இம்முறை விரைவில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது.

- Advertisement -

ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பாபர் அசாம், ஷாகிப் அல் ஹசன், ரசித் கான், ஹஸரங்கா என ஆசியக் கண்டத்தின் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள் தங்களது நாட்டுக்காக கோப்பையை வெல்ல முழு திறமையை வெளிப்படுத்தி போராட உள்ளதால் இந்ததொடரில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நம்பலாம். சரி இத்தொடரை முன்னிட்டு கிட்டத்தட்ட 40 வருடங்கள் வரலாறு கொண்ட ஆசிய கோப்பையில் நிகழ்த்தப்பட்ட நிறைய சாதனைகளில் இந்த வருடம் சில சாதனைகள் உடைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதை பற்றி பார்ப்போம்:

6. அதிக ரன்கள்: 50 ஓவர் மற்றும் 20 ஓவர் என 2 வகையான ஆசிய கோப்பைகளையும் சேர்த்து இலங்கையின் சனாத் ஜெயசூரியா 25 போட்டிகளில் 1220 ரன்களை குவித்து அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

rohith 1

அவருக்கு அடுத்தபடியாக உள்ள குமார் சங்கக்காரா (1075), சச்சின் டெண்டுல்கர் (971), சோயப் மாலிக் (907) ஆகியோர் ஓய்வு பெற்று விட்டதால் அதற்கடுத்த படியாக இருக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இந்த சாதனையை உடைக்க நல்ல வாய்ப்புள்ளது. இதுவரை 883 ரன்களை குவித்துள்ள அவர் இந்த தொடரில் 338 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

5. 1000 ரன்கள்: ஒருவேளை அது முடியாமல் போனால் கூட இன்னும் 118 ரன்கள் எடுத்தால் 1000 ரன்களை எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்து சச்சின், சங்கக்காரா ஆகியோரையாவது முந்துவதற்கு ரோஹித் சர்மாவுக்கு அதிக வாய்ப்புள்ளது.

Rohith

3. அதிக சிக்ஸர்கள்: அதேபோல் அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி (26), இலங்கையின் சனாத் ஜெயசூர்யா (23) ஆகியோருக்குப் பின் 3வது இடத்தில் 21 சிக்சர்களுடன் இருக்கும் ரோகித் சர்மா இந்த தொடரில் இன்னும் 6 சிக்சர்களை அடித்தால் அப்ரிடியை முந்தி புதிய வரலாற்று சாதனை படைப்பார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த ஆசிய பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அவர் இந்த சாதனையை எளிதாக நிச்சயம் முறியடிப்பார் என்று நம்பலாம்.

- Advertisement -

3. அதிக விக்கெட்கள்: ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக இலங்கையின் ஜாம்பவான் லசித் மலிங்கா 33 விக்கெட்டுகளுடன் சாதனை படைத்துள்ளார்.

shakib 1

அவருக்கு அடுத்தபடியாக இந்த வருடம் தொடரில் விளையாடும் வீரர்களில் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 24 விக்கெட்டுகளை ஏற்கனவே எடுத்துள்ள நிலையில் இன்னும் 10 விக்கெட்களை எடுத்தால் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. அவருக்கு அடுத்தபடியாக 22 விக்கெட்டுகளுடன் இருக்கும் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் இந்த சாதனையை உடைக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

2. ஒரு தொடரில்: இந்த வருட ஆசிய கோப்பை 20 ஓவர் தொடராக நடைபெறும் நிலையில் கடந்த 2016இல் வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 20 ஓவர் ஆசிய கோப்பையில் ஹாங்காங்கை சேர்ந்த பாபர் ஹயட் 194 ரன்களை குவித்து ஒரு ஆசிய டி20 கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

babar azam

அந்த வகையில் இந்த வருடம் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, பாபர் அசாம் ஆகியோரில் சிறப்பாக செயல்படுபவர்கள் இந்த சாதனையை எளிதாக முறியடித்து ஒரு ஆசிய டி20 கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைக்க அதிகமான வாய்ப்புள்ளது.

1. அதிகபட்ச ஸ்கோர்: அதேபோல் 2016இல் நடைபெற்ற 20 ஓவர் ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிராக 180/5 ரன்களைக் குவித்த ஓமன் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவுசெய்த அணியாக சாதனை படைத்துள்ளது.

IND vs WI 5th T0I

தற்போது சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்களை கொண்டிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் இந்த வருடம் ஏதேனும் ஒரு போட்டியில் 200 ரன்களை குவித்தால் ஆசிய டி20 கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக புதிய சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது.

Advertisement