பார்ம் தற்காலிம், க்ளாஸ் நிரந்தரம் – தவிக்கும் விராட் கோலிக்கு தெ.ஆ ஜாம்பவான் கொடுத்த மெகா ஆதரவு

Kohli
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் 23000+ ரன்களையும் 70 சதங்களையும் ஏராளமான வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்து தன்னை உலகத்தரம் வாய்ந்த ஜாம்பவான் பேட்ஸ்மேனாக நிரூபித்துள்ளார். அதிலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற அளவிலான பேட்டிங் சராசரியுடன் 2010 – 2019 வரையிலான காலகட்டத்தில் அதிக ரன்கள், சதங்கள் விளாசி 2010 தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதை வென்றுள்ள அவர் இளம் வயதிலேயே இமாலய வளர்ச்சியை பெற்றுள்ளார். அதுபோக 2014 முதல் டெஸ்ட் 2017 முதல் 3 வகையான இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அவர் உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

Kohli

- Advertisement -

அப்படி எடுத்துக் கொண்ட அத்தனை பொறுப்பிலும் மிகச் சிறப்பான செயல்பட்டதால் ஏற்பட்ட பணிச்சுமை கடந்த 2019க்குப்பின் அடுத்த சதத்தை அடிக்க விடாமல் அவரின் பிரமாண்ட கேரியரில் மெகா வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து விடுபடுவதற்காக கேப்டன்ஷிப் பொறுப்புகளை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடத் தொடங்கிய அவர் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது, சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு அரைசதம் கூட அடிக்காதது என எதிர்பார்த்ததை விட சுமாராக செயல்படுவதால் பொறுமையிழந்த கபில் தேவ் போன்ற முன்னாள் வீரர்கள் அவரை அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்துள்ளனர்.

குவியும் ஆதரவு:
இத்தனைக்கும் இடையிடையே 40, 70 போன்ற நல்ல ரன்களை எடுத்து வரும் அவர் சதமடிக்கவில்லை என்பதற்காக அனைவரும் பார்ம் அவுட் என்ற முத்திரையை குத்தி விட்டார்கள். களமிறங்கினாலே சதமடிப்பார் என எதிர்பார்க்கும் அளவுக்கு ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டு தனக்கென்று தங்கமான தரத்தை உருவாக்கியதே இந்த அளவுக்கு அவர் விமர்சனத்தை சந்திக்க காரணமாகியுள்ளது. இருப்பினும் அவரது தரத்தை உணர்ந்த கெவின் பீட்டர்சன் போன்ற வெளிநாட்டவர்கள் இங்கு ஜாம்பவான்கள் என்ற பெயருடைய நிறைய முன்னாள் வீரர்கள் 70 சதங்களை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்ற வகையில் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

abd 1

மேலும் பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங், மகிளா ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித் போன்ற நிறைய வெளிநாட்டு ஜாம்பவான் முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவை விராட் கோலிக்கு கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் விரர் ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலியை போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு பார்ம் தற்காலிகமானது கிளாஸ் நிரந்தரமானது என்பதால் அவரை விமர்சிக்க தேவையில்லை என்று ஆதரவு கொடுத்துள்ளார்.

- Advertisement -

ஏபிடி ஆதரவு:
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக கடந்த பல வருடங்களாக இணைந்து விளையாடியதால் விராட் கோலியின் குணத்தையும் திறமையும் நன்கு தெரிந்து வைத்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த விளையாட்டில் விளையாடியவர்களில் விராட் கோலி மிகச்சிறந்த ஒருவர். பார்ம் என்பது தற்காலிகமானது கிளாஸ் மட்டுமே நிரந்தரமானது. எனவே விராட் கோலி எப்போதுமே உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அவருடன் நான் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து வருகிறேன். நாங்கள் நல்ல நண்பர்கள். இந்த மோசமான தருணத்தில் கடினமாக உழைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவருக்கு நான் நிச்சயமாக சொல்லத் தேவையில்லை” என்று கூறினார்.

அதாவது உலகத்தரம் வாய்ந்த வீரரான விராட் கோலிக்கு ஃபார்முக்கு எப்படி திரும்புவது என சொல்ல வேண்டியதில்லை என்று தெரிவிக்கும் ஏபி டிவில்லியர்ஸ் அனைவருமே வாழ்வில் இதுபோன்ற மோசமான தருணத்தை கடந்து வருவது சகஜம்தான் என்று கூறியுள்ளார். மைதானத்தின் நாலா புறங்களிலும் சுழன்றடித்து புதுபுது ஷாட்டுகளை அறிமுகப்படுத்தி கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர் பெங்களூரு அணிக்காக 156 போட்டிகளில் 4491 ரன்களைக் குவித்து கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

அதனால் ஆர்சிபி ஹால் ஆஃப் பேம் எனும் விருதை பெற்றுள்ள அவர் வரும் சீசன்களில் பெங்களூரு அணியுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். அதுபோக ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் முகாமிலும் அவர் விரைவில் பங்கேற்க உள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : IND vs ZIM : சான்ஸ் கொடுக்கலைனா எதுக்கு செலக்ட் பண்ணீங்க – மீண்டும் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட 2 வீரர்கள், ரசிகர்கள் அதிருப்தி

“பெங்களூரு அணியுடன் நிறைய வருடங்கள் இணைந்து செயல்பட்டதை பெருமையாக நினைக்கிறேன். தற்போதும் அந்த அணியுடன் தொடர்பில் உள்ள நான் 2023 ஐபிஎல் தொடரின் போது ஆர்சிபி ஹால் ஆஃப் பேம் அங்கீகாரத்தை பெற உள்ளது மிகப்பெரிய கவுரவமாகும்” என்று கூறினார்.

Advertisement