ஆக்ரோஷமான விராட் கோலியால் சாதிக்க முடியாததை ரோஹித் சாதித்து காட்டிருக்காரு – முன்னாள் வீரர் கருத்து

Rohith
- Advertisement -

கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி தலைமையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது. முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பின் அவரது தலைமையில் இந்தியா இதுவரை எந்த ஒரு தொடரில் தோல்வியடையாமல் வெற்றிநடை போட்டு வருகிறது. அதிலும் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆலோசனைகளுடன் அதிரடியாகவும் ஆக்ரோசமாகவும் விளையாட முயற்சிப்பதே இந்த வெற்றியின் ரகசியம் என்றும் சமீபத்தில் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

INDIA IND vs ENG Rohit Sharma

- Advertisement -

இருப்பினும் கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் 300+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் கையிலிருந்த வெற்றியை இந்தியா கோட்டை விட்டபோது விராட் கோலியின் ஆக்ரோசம் நிறைந்த கேப்டன்ஷிப் இருந்திருந்தால் இந்தியா தோற்றிருக்காது என நிறைய இந்திய ரசிகர்கள் வெளிப்படையாக பேசினார்கள். ஏனெனில் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற போது சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக தர வரிசையில் 7வது இடத்தில் திண்டாடிக் கொண்டிருந்த இந்தியாவை தனது ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக வெளிநாடுகளில் வெல்லும் அணியாக மாற்றிய பெருமை அவரைச் சாரும்.

ஆக்ரோசமான விராட்:
அதே போல் எதிரணி மிரட்டல் கொடுத்தாலும் அதற்காக அஞ்சாமல் தோல்வியின் பிடியில் சிக்கினாலும் அதற்காக அசராமல் எந்த நிலையில் இருந்தும் மீண்டெழுந்து எதிரணிக்கே மிரட்டல் அளிக்கும் வகையில் வெற்றிக்காக போராட வேண்டும் என்ற போராட்ட குணத்தை இந்திய அணியில் ஆழமாக விதைத்த பெருமையும் விராட் கோலியை சேரும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அவரது தலைமையில் பதிவு செய்த வெற்றியே அதற்குச் சான்றாகும்.

Kohli-1

அதிலும் கடந்த 2021இல் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட், கேப் டவுனில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் ஆகியவற்றில் எதிரணி மிரட்டிய போதும் இந்தியாவுக்கு எதிராக நடுவர்கள் செயல்பட்ட போதும் விராட் கோலியும் இந்திய அணியும் எரிமலை போன்ற ஆக்ரோஷத்தை காட்டியதை யாரும் மறக்க முடியாது. அந்த வகையில் தோல்வியின் பிடியில் சிக்கினாலும் தனது ஆக்ரோசம் மற்றும் எனர்ஜி வாயிலாக இதர வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் கேப்டனாக விராட் கோலியும் அவரது தலைமையிலான இந்திய அணியும் இருந்தது.

- Advertisement -

உண்மையான ஆக்ரோஷம்:
இந்நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் அவர் மட்டும்தான் ஆக்ரோஷமாக இருந்ததாகவும் இதர 10 வீரர்கள் சாதாரணமாகவே செயல்பட்டதாக கூறும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தற்போது ரோகித் சர்மா தலைமையில் ஆர்ப்பாட்டமில்லாத உண்மையான ஆக்ரோசம் உருவாகியுள்ளதாக பாராட்டியுள்ளார். அதாவது ரோகித் சர்மா தலைமையில் அனைத்து வீரர்களும் ஆக்ரோஷத்தை வெறும் உடல் செய்கையால் காட்டாமல் செயல்பாடுகளால் சிறந்த ஆட்டத்தால் காட்டுவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“விராட் கோலி எப்போதும் “இதை நான் செய்ய விரும்புகிறேன்” இதை செய்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன் என்பதில் கவனம் செலுத்தினார். விராட் கோலி எப்போதும் களத்தில் பின் வாங்கக்கூடாது என்ற வகையில் தனது முகத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவரது தலைமையிலான இந்திய அணி ஆக்ரோஷத்துடன் செயல்படவில்லை. அதாவது அவர் மட்டும்தான் ஆக்ரோஷமாக இருந்தார் ஆனால் அணி ஆக்ரோஷமாக இல்லை. அவர் வெற்றியின் நோக்கம் பற்றி பேசும்போது புஜாரா ஒரே போட்டியில் 2 முறை ரன் அவுட்டானார். எனவே அவரது ஆக்ரோஷம் எனும் வார்த்தையை அணியினர் சரியாக புரிந்து கொள்ளவில்லை”

- Advertisement -

“விராட் கோலியின் தலைமையில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய விதம் அபாரமானது. ஏனெனில் 5 பந்துவீச்சாளர்களை கொண்டு வந்த அவர் விதிமுறைகளை மாற்றியமைத்தார். அங்கு அவருடைய தத்துவம் ஆக்ரோஷமாக இருந்தாலும் அவருடைய அணி ஆக்ரோசமாக இருந்ததா இல்லையா என்பது முக்கியம். விராட் கோலி ஆக்ரோஷமான வீரர் என்றாலும் அவரது தலைமையிலான அணி அவ்வாறு இல்லை. இங்கு மட்டுமல்ல ஐபிஎல் தொடரிலும் அதே கதை தான் இருந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க : டி20யால் சர்வதேச கிரிக்கெட்டை அழியாமல் ஐசிசி காப்பாற்றனும் – ஐபிஎல்க்கு எதிராக குரல் கொடுத்த இந்திய ஜாம்பவான்

விராட் கோலியை போல் அவரது தலைமையில் விளையாடிய இந்திய அணியினர் வெற்றி நோக்கத்துடன் விளையாடாததாலேயே அவரால் உலகக் கோப்பை அல்லது ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்று தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா தற்போதுள்ள ரோகித் சர்மா தலைமையிலான அணியில் அனைத்து வீரர்களிடமும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக கூறியுள்ளார். அதுவே 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா இங்கும் வெற்றிகரமான கேப்டனாக செயல்படுவதற்கான ரகசியம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

Advertisement