கேப்டன்ஷிப்னா என்னானு தெரியுமா? இந்திய வீரரை கெட்ட வார்த்தையால் திட்டிய பாண்டியா – ரசிகர்கள் கோபம்

- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 11-ஆம் தேதி நடைபெற்ற 21-வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு கடந்த போட்டிகளில் அசத்திய தொடக்க வீரர் கில்’ 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 7 (9) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ வேட் 19 (19) ரன்களில் அவுட்டானதால் 64/3 என ஆரம்பத்திலேயே குஜராத் தடுமாறியது.

அந்த இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது அணியை மீட்டெடுக்க அதிரடியாகவும் நிதானத்துடன் விளையாடி 42 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 50* ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அவருக்கு துணையாக அபினவ் மனோகர் 35 (21) ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த குஜராத் போராடி 162 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் அசத்திய தமிழக வீரர் நடராஜன் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

ஹைதெராபாத் வெற்றி:
அதை தொடர்ந்து 163 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிஷேக் வர்மா 32 பந்துகளில் 6 பவுண்டரி உட்பட 42 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ராகுல் திரிப்பாதி 17 (11) ரன்களை அதிரடியாக எடுத்துக்கொண்டிருந்த போது காயமடைந்ததால் பாதியிலேயே வெளியேறினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த வில்லியம்சன் 46 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 57 ரன்கள் குவித்து வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 34* ரன்களும் ஐடன் மார்க்ரம் 12* (8) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 19.2 ஓவர்களில் 168/2 ரன்களை எடுத்த ஹைதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் இதர வீரர்கள் சொதப்பிய நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டும் குஜராத் அணியின் வெற்றிக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தனி ஒருவனாக சிறப்பான ஆல்-ரவுண்டராக போராடினார். பேட்டிங்கில் 50* ரன்களை குவித்த அவர் பந்து வீச்சில் 4 ஓவர்களை வீசி 27 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். இருப்பினும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் கேப்டனாக முதல் தோல்வியை பதிவு செய்து அவர் நேற்றைய போட்டியில் கடும் கோபத்துடன் காணப்பட்டார்.

ரசிகர்கள் கோபம்:
அதிலும் 13-வது ஓவரை அவர் வீசியபோது அதை எதிர்கொண்ட ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் 2, 3 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்து சிக்சரை பறக்கவிட்டார். அதனால் கடுப்பான ஹர்திக் பாண்டியா அதே ஓவரின் கடைசி பந்தை வீச அதை எதிர்கொண்ட ராகுல் திரிப்பாதி சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் அந்த பந்து தேர்ட் மேன் பகுதியில் நின்று கொண்டிருந்த முகமது சமியிடம் சென்றது.

- Advertisement -

அவர் மிகவும் கடினமாக முயற்சி செய்து தாவிப்பிடித்திருந்தால் அந்த கேட்சை ஒருவேளை பிடித்து இருந்திருக்கலாம். ஆனால் தாவிப்பிடிக்க முயற்சிக்காத அவர் பந்தை பிடிக்க வேகமாக முன்னோக்கி ஓடிய போதிலும் அந்த கேட்ச்சை பிடிக்க முடியவில்லை. அதனால் ஆத்திரமடைந்த ஹர்திக் பாண்டியா உடனடியாக முகமது சமி மீது கோபமடைந்து கடுமையான சொற்களால் திட்டினர். அதை பார்த்த ரசிகர்கள் தற்போது அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக சாடி வருகிறார்கள்.

ஏனெனில் விளையாட்டில் அதுவும் முகமது சமி போன்ற ஒருவர் வேண்டுமென்றே டைவ் அடிப்பதற்கு பயந்துகொண்டு கேட்ச்சை பிடிக்காமல் கோட்டை விடுபவர் அல்ல. ஒருவேளை அப்படி பிடித்திருந்தாலும் கூட கண்டிப்பாக 100% அது கேட்ச்சாக மாறி இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஒருவேளை டைவ் அடிக்க முயற்சித்தது பந்து தவறிப் போனால் பவுண்டரிக்கு சென்று 4 ரன்கள் தேவையில்லாமல் எதிரணிக்கு போய்விடும்.

- Advertisement -

இப்படி பல காரணங்கள் இருக்கும் நிலையில் முதல் முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா ஒரு சில வெற்றிகளை பதிவு செய்துவிட்டோம் என்பதற்காக அணியில் உள்ள வீரர்களிடம் இப்படி கோபமாக நடந்து கொள்ளலாமா என ரசிகர்கள் திட்டுகின்றனர். மேலும் வெறும் வெற்றியை மட்டும் பெறுவது கேப்டன்ஷிப் அல்ல எனக்கூறும் ரசிகர்கள் அணி வீரர்களை பொறுமையுடன் கையாளுவது தான் சிறந்த தலைமைப் பண்புக்கு அழகு என்றும் சாடுகின்றனர்.

இதையும் படிங்க : மிரட்டலான வேகம்! டி20 உலககோப்பை இந்திய அணியில் செலக்ட் பண்ணுங்க – இளம் வீரருக்கு குவியும் ஆதரவு

அத்துடன் நிறைய கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா, எம்எஸ் தோனி கூட இது போன்ற சிறிய விஷயத்துக்காக தங்களது அணி வீரர்களை திட்ட மாட்டார்கள் என்றும் ரசிகர்கள் பாண்டியாவை விளாசி வருகின்றனர்.

Advertisement