INDvsSL முதல் டி20 : இந்திய அணியில் 6 மாற்றங்களை செய்துள்ள கேப்டன் ரோஹித் – பிளேயிங் லெவன் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று லக்னோ மைதானத்தில் சில நிமிடங்களுக்கு முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் காயமடைந்ததன் காரணமாக சில வீரர்களும், ஓய்வு காரணமாக சில வீரர்களும் வெளியேறி உள்ளதால் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி சில நிமிடங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்துள்ளார். அதன்படி தற்போது இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் டாஸிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசுகையில் : கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அணியில் இருந்து 6 பேர் தற்போது மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி இந்த போட்டியில் பும்ரா, புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜடேஜா, சஞ்சு சாம்சன் மற்றும் அறிமுக வீரராக தீபக் ஹூடா ஆகியோர் விளையாடுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணியில் பல வீரர்கள் வெளியேறிய நிலையில் தற்போது முற்றிலும் மாறுபட்ட அணியாக இந்த அணி இருந்தாலும் நிச்சயம் வெற்றியுடன் துவங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. மேலும் பலம் இழந்த இலங்கை அணியை நிச்சயம் இந்திய அணியானது பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியின் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அவரு செட்டாகல. ரோஹித் கூட இந்த இலங்கை தொடரில் இவரை ஒப்பனராக இறக்குங்க – வாசிம் ஜாபர் வேண்டுகோள்

1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) சூரியகுமார் யாதவ், 5) ரவீந்திர ஜடேஜா, 6) வெங்கடேஷ் ஐயர், 7) தீபக் ஹூடா, 8) ஹர்ஷல் படேல், 9) புவனேஷ்வர் குமார், 10) பும்ரா, 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement