இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 61 ரன்களும் கையில் மேயர்ஸ் 31 ரன்களும் குவித்தனர்.

அதன் பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும், வெங்கடேச ஐயர் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த போட்டியில் அறிமுக வீரராக விளையாடிய ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டியில் நடைபெற்ற ஒரு அதிசய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்திய அணி எப்போதுமே அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினாலும் அதில் ஒருவர் லெக் ஸ்பின்னர் ஆகும் ஒருவர் ஆப் ஸ்பின்னராகவும் இருப்பார்கள்.
ஆனால் நேற்றைய போட்டியில் களமிறங்கிய யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இருவருமே (ரிஸ்ட்) லெக் ஸ்பின்னர்கள். இப்படி ஒரே வகையான லெக் ஸ்பின்னர்கள் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் இணைந்து விளையாடுவது இதுவே வரலாற்றில் இரண்டாவது முறை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : முரட்டு தனமான பேட்டிங். தோற்றாலும் 3 இந்திய வீரர்களை காயமடைய செய்த பொல்லார்டு – நடந்தது என்ன?
இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சாஹல் மற்றும் மயங்க் மார்கண்டே ஆகிய இரண்டு ஸ்பின்னர்கள் ஒன்றாக விளையாடி இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து இப்போதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியில் ஒரே போட்டியில் இரண்டு ரிஸ்ட் லெக் ஸ்பின்னர்கள் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.



