குழந்தை பிறந்த ராசி. சி.எஸ்.கே அணிக்காக அசத்தலான தொகைக்கு தேர்வான – இளம் வீரர்

CSK-2
- Advertisement -

ஐபிஎல் 2022 சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 590 வீரர்கள் பங்கு பெற்ற போதிலும் இறுதியில் 204 வீரர்கள் மட்டுமே 551 கோடி ரூபாய் செலவில் 10 ஆணிகளால் வாங்கபட்டுள்ளார்கள். வழக்கம் போலவே இந்த வருடமும் இந்திய நட்சத்திர வீரர்களும் வெளிநாட்டு நட்சத்திர வீரர்களும் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்கள்.

CSK-Auction

- Advertisement -

இம்முறை நடந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக இந்தியாவைச் சேர்ந்த இஷான் கிசான் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி சாதனை படைத்தார். இந்த ஏலத்தில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 21 வீரர்களை தேர்வு செய்து தங்களது அணியை முழுமைப்படுத்தி உள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிகபட்சமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் 14 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதேபோல் டேவோன் கான்வே, ஆடம் மில்னே போன்ற வெளிநாட்டு வீரர்களை முதல் முறையாக தங்கள் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்த சென்னை அணி நிர்வாகம் இந்திய இளம் ஆல்ரவுண்டர் சிவம் துபேவை 4 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியது.

Gowtham-1

காலையில் குழந்தை மாலையில் 4 கோடி:
இதில் ஒரு வியக்க வைக்கும் அம்சம் என்னவெனில் பிப்ரவரி 13ஆம் தேதியன்று காலை சிவம் துபேக்குக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்த அதிர்ஷ்டம் அன்று மாலையே ஐபிஎல் ஏலத்தில் 4 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட அவர் ஒப்பந்தமானார்.

- Advertisement -

அதுபற்றி சிவம் துபே பேசியது பின்வருமாறு. “எனது மகன் எனக்கு அதிர்ஷ்டத்தை தேடி கொண்டு வந்துள்ளான். தோனியின் கீழ் விளையாட வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஒருவழியாக தற்போது பலித்துள்ளது. அவரின் கீழ் விளையாடிய பல வீரர்கள் காலப்போக்கில் மிகச் சிறப்பாக விளையாடியதை நான் பார்த்துள்ளேன். அத்துடன் அவர் தலைமையில் விளையாடினால் அணியில் நமது இடம் பாதுகாப்பாக இருக்கும். அவர் தலைமையில் விளையாடுவதற்காக நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் அவர் தலைமையில் சென்னை அணியில் மிகச் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணிக்காக விளையாட முயற்சிக்க உள்ளேன்” என கூறியுள்ளார்.

dube

நீண்டநாள் கனவு:
பொதுவாகவே தனது அணியில் விளையாடும் வீரர்களுக்கு அதிகப்படியான ஆதரவை அளித்து அவர்கள் ஒரு நல்ல கிரிக்கெட்டராக வளர உதவும் ஒரு கேப்டனாக எம்எஸ் தோனி அறியப்படுகிறார். அவரின் கீழ் விளையாடிய ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற இந்திய வீரர்களும் நிறைய வெளிநாட்டு வீரர்களும் இன்று இந்த அளவுக்கு உயர்வதற்கு தோனியின் ஆதரவு தான் காரணம் என அவர்களே பலமுறை தெரிவித்துள்ளார்கள்.

அதே போலவே தோனியின் கீழ் விளையாடி மிக விரைவில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட கடுமையாக முயற்சியை எடுக்க உள்ளதாக சிவம் துபே தெரிவித்துள்ளார். இந்தியாவுக்காக கடந்த 2019ஆம் ஆண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஷிவம் துபே இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணியில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான நடந்த ஒரு டி20 போட்டியில் விளையாடி இருந்த அவர் மிகச் சிறப்பாக செயல்பட தவறிய காரணத்தால் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

dube

அதன்பின் ஐபிஎல் தொடரில் பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற அணிகளுக்காக விளையாடிய போதிலும் இந்திய அணிக்கு அவரால் திரும்ப முடியவில்லை. தற்போது சென்னை அணியில் விளையாட இருக்கும் அவர் தோனியின் கீழ் மிகச் சிறப்பாக செயல்பட்டு அதன் வாயியாக இந்திய அணியில் மீண்டும் விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் துவங்க இருக்கும் ரஞ்சி கோப்பையில் சிவம் துபே மும்பை அணிக்காக விளையாட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement