மாயங்க் அகர்வாலுக்கு போட்டியாக மற்றொரு ஓப்பனரை அணியில் இணைத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

ind
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை பிப்ரவரி 6 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரில் முதலாவதாக நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளன. இந்த முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டு அகமதாபாத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

ind

- Advertisement -

இந்நிலையில் அகமதாபாத் பயோ பபுளில் இருந்த இந்திய வீரர்கள் 5 பேர் மற்றும் நிர்வாகிகள் மூவர் என எட்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இந்த தொடரில் முதலாவது ஒருநாள் போட்டியில் துவக்க வீரரான ராகுல் தனது சகோதரியின் திருமணம் காரணமாக கலந்து கொள்ளவில்லை.

அதேபோன்று துவக்க வீரர்களாக இடம்பெற்ற ஷிகர் தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் முதல் ஒருநாள் போட்டியின்போது ரோகித் சர்மாவுடன் களமிறங்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Agarwal

இந்நிலையில் வீரர்கள் கொரோனா பாதிப்பினால் சிக்கியதன் காரணமாக தற்போது கூடுதல் துவக்க வீரராக மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை பிசிசிஐ நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது கூடுதல் துவக்க வீரராக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அறிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் ஜடேஜா சேர்ந்து 10 வருஷம் ஆச்சு – சி.எஸ்.கே அணி கொடுத்த ரியாக்ஷன்

இதன் காரணமாக முதலாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவுடன் யார் களமிறங்கப்போவது? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அகர்வால் மற்றும் ரோஹித் ஆகியோர் வலதுகை துவக்க வீரர்கள் ஆனால் ரோகித் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் வலது இடது கை துவக்க வீரர்கள் என்பதால் எந்த அடிப்படையில் இந்திய அணி களமிறங்க போகிறது என்பது நாளைய போட்டியில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement