இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி கடந்த 2021 டி20 உலகக் கோப்பையுடன் அந்த பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றார். அவர் தலைமையில் இந்தியா ஒரு உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் பல சரித்திர வெற்றிகளை பதிவு செய்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்தது. தற்போது பயிற்சியாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் விரைவில் மீண்டும் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் ரவி சாஸ்திரியின் வர்ணனை குரலுக்கென்றே பல ரசிகர்கள் உள்ளார்கள்.

மாஸ் விராட் கோலி:
இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தருடன் நேர்காணலில் ஈடுபட்ட ரவி சாஸ்திரி இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் எம்எஸ் தோனி, விராட் கோலி போன்றவர்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.
விராட் கோலி பற்றி சோயப் அக்தரின் யூடியூப் சேனலில் அவர்,
“களத்தில் விராட் கோலி ஒரு மிருகத்தை போன்றவர். ஒருமுறை களத்தில் அவர் இறங்கி விட்டால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெற்றிக்காக கடுமையாக போட்டியிட கூடியவர். ஆனால் களத்திற்கு வெளியே அப்படியே நேர்மாறாக மிகவும் அமைதியாக ஜாலியாக இருக்க கூடியவர். ரோஹித் சர்மாவும் எம்எஸ் தோனியை போன்றவர். ஆனால் எம்எஸ் தோனி மிகவும் வித்தியாசமானவர். டக் அவுட் ஆனாலும், சதம் அடித்தாலும், உலகக்கோப்பையை வென்றாலும் அதைப்பற்றி பெரிதாக நினைக்கமாட்டார்”

என கூறியுள்ள ரவி சாஸ்திரி கடந்த 2017 முதல் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அவர் தலைமையில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர்களான எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய 3 வீரர்களும் விளையாடியுள்ளார்கள்.
சச்சினை விட சிறந்த தோனி:
கிரிக்கெட்டில் எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் அதில் அமைதியாக இருந்து வெற்றி பெறுவதில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வல்லவர். அவரின் அந்த குணம் பற்றி ரவிசாஸ்திரி பேசுகையில்,

“நான் எத்தனையோ வீரர்களை பார்த்துள்ளேன். ஆனால் எம்எஸ் தோனியை போல் யாருமில்லை. சச்சின் டெண்டுல்கருக்கு இயல்பாக இருக்கும் மனநிலை உள்ளது, இருப்பினும் அடிக்கடி கோபப்பட்டு விடுவார். ஆனால் தோனி அவ்வாறு இல்லை. இன்றுவரை தோனியின் போன் நம்பர் என்னிடம் கிடையாது. நானும் அவரிடம் போன் நம்பர் இதுவரை கேட்டதில்லை. ஏனெனில் அவர் எப்போதும் மொபைல் போனை தன்னிடம் வைத்துக்கொள்ள மாட்டார்” நானும் அவரிடம் இதுவரை அவருக்கு போன் செய்ததில்லை என கூறிய அவர் அமைதியாகவும் கூலாகவும் இருப்பதில் சச்சின் டெண்டுல்கரை விட எம்எஸ் தோனி மிகச் சிறந்தவர் என கூறியுள்ளார்.
கோலிக்கு ஆலோசனை:
“தனக்கு 33 வயது நிரம்பிய தை விராட் கோலி உணர்ந்துள்ளார் என நம்புகிறேன். அவரிடம் இன்னும் 5 வருடங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடும் தகுதி உள்ளது. 2 – 3 மாதங்களுக்கு ஒருமுறை அவ்வப்போது அவர் ஓய்வு எடுத்துக்கொண்டு புத்துணர்ச்சியுடன் விளையாடலாம். இனி விராட் கோலி ஒரு சாதாரண வீரராக விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்”
இதையும் படிங்க : பும்ராவை தொடர்ந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள மற்றொரு சீனியர் வீரர் – லிஸ்ட்ல இதை கவனிச்சீங்களா?
என சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகி சாதாரண வீரராக இந்திய அணியில் விளையாட துவங்கியிருக்கும் விராட் கோலி பற்றி ரவிசாஸ்திரி மேலும் கூறினார். இனி பணிச்சுமை எதையும் எடுத்துக்கொள்ளாமல் அடுத்த 5 வருடங்களில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொண்டு புத்துணர்ச்சியுடன் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என விராட் கோலிக்கு அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.



