வெ.இ தொடருக்கு பிட்டாக இருந்தும் ஒதுக்கப்பட்ட பாண்டியா? – பி.சி.சி.ஐ எடுத்த அதிரடி முடிவு

Pandya-2
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஏற்கனவே காயத்தால் தென் ஆப்பிரிக்க தொடரை தவறவிட்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது இரண்டு வகையான அணிக்கு கேப்டனாக மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

- Advertisement -

அதே போன்று தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட தவறிய சில வீரர்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அணியில் உள்ள சீனியர் வீரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாகவும் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா இந்த தொடருக்கு அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்ததும் தான் இனி பந்துவீசி முழு ஆல்-ரவுண்டராக விளையாடினால் மட்டுமே அணிக்குள் வருவேன் என்றும் அதுவரை தான் பயிற்சியை மேற்கொள்ள இருப்பதால் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்று பாண்டியா கேட்டுக்கொண்டிருந்தார்.

pandya 3

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்ட பாண்டியா தற்போது பந்துவீசும் அளவிற்கு தயாராகியுள்ளார். மேலும் தனது உடற் தகுதியை அவர் நிரூபித்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ அவருக்கு இப்படி வாய்ப்பினை மறுக்க மிக முக்கிய காரணமாக அவரது ஆட்டிட்யூட் தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : என்னது நாங்க அங்க போகனுமா? போனா உயிரோட திரும்புவோமா? – பயத்தில் ஆஸி வீரர்கள்

ஏனெனில் பிசிசிஐ அவரை நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாட வைக்கலாம் என்று நினைத்த போது நான் பயிற்சிக்கு செல்கிறேன் என்று யாரிடமும் கேட்காமல் அவராகவே முடிவு எடுத்ததால் அவரை அணியில் தேர்வு செய்ய பி.சி.சி.ஐ விரும்பவில்லை. மேலும் ஐபிஎல் தொடர் முடிவடைந்து அதில் அவர் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இனி அவர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும் என்றும் பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement