இந்திய ஒருநாள் அணியில் இருந்து சத்தமில்லாமல் கழட்டி விடப்பட்ட நட்சத்திர வீரர் – இது தெரியுமா?

shami
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே வரும் ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் உடற்தகுதிக்காக காத்திருந்த பிசிசிஐ ஒருவழியாக நேற்று இரவு இந்த ஒருநாள் தொடருக்கான அணியை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

IND

- Advertisement -

அதில் இன்னும் ரோகித் சர்மா விளையாடும் அளவிற்கு உடற்தகுதி பெறாததால் அவர் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ராகுலும், துணை கேப்டனாக பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுதவிர 18 பேர் கொண்ட முறையான ஒருநாள் தொடரின் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.

இப்படி வெளியான இந்த அணியில் பல மாற்றங்கள் இருந்தன. விஜய் ஹசாரே தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றிஅண்மையில் டி20 கிரிக்கெட் அணிக்கு திரும்பிய தமிழக வீரர் அஷ்வினுக்கு மீண்டும் அணியில் கம்பேக் கொடுக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

shami

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரரான முகமது ஷமி-யின் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடி வருவதன் காரணமாக முகமது ஷமிக்கு ஓய்வை வழங்கவே இந்த நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணிக்காக நிச்சயம் இவர் அற்புதங்களை நிகழ்த்துவார் – இளம்வீரரை புகழ்ந்த தேர்வுக்குழு தலைவர்

மேலும் ஒருநாள் அணியில் தீபக் சாஹர் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையிலும் ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரமாதமான பவுலிங்கை வெளிப்படுத்திய ஷமி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement