கடைசியாக இந்தியா விளையாடிய 3 பாக்சிங் டே போட்டியிலும் இந்திய அணி செய்த சம்பவம் – என்ன தெரியுமா?

IND
- Advertisement -

கிரிக்கெட் விளையாடும் அனைத்து அணிகளுக்குமே பாக்ஸிங் டே போட்டி என்பது ஒரு கௌரவ போட்டியாக பார்க்கப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கும் இந்த போட்டியை பாக்ஸிங் டெஸ்ட் என்று அழைப்பார்கள். அந்த டெஸ்டில் ஜெயிப்பதற்கு அனைத்து அணிகளுமே தங்களது உத்வேகத்தை காண்பிக்கும். அப்படி ஒரு முக்கியமான இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி தான் தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. கடந்த 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 305 ரன்களை அடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா அணி இன்று 191 ரன்களில் ஆட்டமிழந்தது.

Ashwin

- Advertisement -

இதன்காரணமாக இந்திய அணி இந்த போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. அதன்படி தற்போது தென்னாப்பிரிக்க மண்ணில் பாக்சிங் டே வெற்றியை பெற்ற இந்திய அணியானது இந்த தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசியாக இந்திய அணி விளையாடிய மூன்று பாக்சிங் டே போட்டிகளை பற்றிய தொகுப்பு தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

2018ஆம் ஆண்டு : கோலி தலைமையிலான இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் புஜாராவின் அபார சதத்தின் மூலம் முதல் இன்னிங்சில் 443 ரன்கள் குவித்து இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களில் சுருண்டது. பின்னர் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Rahane-3

ஆனால் அதனை துரத்தி ஆஸ்திரேலிய அணி 261 ரன்களை மட்டுமே குவிக்க 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றது. அடுத்ததாக 2020 ஆம் ஆண்டு : ரஹானே தலைமையில் மீண்டும் பாக்ஸிங் டே போட்டியில் அதே மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களை மட்டுமே குவிக்க இந்திய அணியானது ரஹானேவின் சதம் மூலமாக 326 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட்ல இருந்து ரிட்டயர்டு ஆன அன்னைக்கு நைட்டு தோனி என்ன பண்ணார் தெரியுமா? – அஷ்வின் தகவல்

பின்னர் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்று முடிந்த பாக்ஸிங் டே போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி பெற்றுள்ளதால் தொடர்ந்து மூன்று பாக்ஸிங் டே போட்டிகளில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement