சென்னை விளையாடும் ஐபிஎல் இறுதி போட்டியில் மேட்ச் பிக்சிங்கா..! – அதிர்ச்சியை கிளப்பும் வீடியோ..?

csk
- Advertisement -

ஐபிஎல் போட்டியின் முதல் தகுதி போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதி சுற்றிற்கு தகுதி பெற்றது சென்னை அணி. மேலும் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி நாளை நடைபெறவுள்ள ஹைதராபாத் அணியுடனான இரண்டாவது தகுதி சுற்றில் விளையாடவுள்ளது கொல்கத்தா அணி.

நாளை நடக்கவுள்ள இந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி வரும் ஞாயற்றுக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இறுதி போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ளும்.

- Advertisement -

இந்நிலையில் இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போகும் அணி யாரென்று முடிவாகாத நிலையில், ஹாட் ஸ்டாரின் வெளியாகி இருந்த புதிய ஐபிஎல் விளமபர வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் இறுதி போட்டிக்கான விளாமரமான அந்த வீடியோவில் சென்னை மற்றும் கொல்கத்தா அணி விளையாடுவது போல காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இன்னும் இறுதி போட்டி நடைபெறாத நிலையில் எப்படி கொல்கத்தா மற்றும் சென்னை அணி தான் இறுதி போட்டியில் விளையாடுவது போல விளம்பரத்தை வெளியிட்டது என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அத்துடன் இதில் மேட்ச் பிக்சிங் இருக்கிறதா என்றும் நினைத்து வருகின்றனர்,. இந்நிலையில் இந்த விடியோவை தனது ஹாட் ஸ்டார் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Advertisement