வீடியோ : அட்டகாசமான கேட்சை பிடித்து அசரவைத்த டூபிளெஸ்ஸிஸ் – வைரல் வீடியோ

Faf
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 38-வது போட்டி அபுதாபி மைதானத்தில் இன்று மதியம் முதல் போட்டியாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய சென்னை அணியானது 20வது ஓவரின் கடைசி பந்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் த்ரில்லிங்கான வெற்றியைப் பெற்றது.

cskvskkr

இந்நிலையில் இந்த போட்டியில் டூபிளெஸ்ஸிஸ் பிடித்த ஒரு கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் அடித்த பந்தை லாங் ஆனில் இருந்த டூபிளெஸ்ஸிஸ் அபாரமாக பிடித்தது மட்டுமின்றி தான் பவுண்டரி லைனில் ஒட்டி உள்ளோம் என்பதை கணித்து பந்தினை தூக்கி போட்டு பிறகு மீண்டும் வந்து பிடித்தார்.

இதுபோன்று டூபிளெஸ்ஸிஸ் கேட்ச் பிடிப்பது புதிதல்ல என்றாலும் இந்த கேட்ச் ரசிகர்களை வியக்க வைக்கும் விதமாக உள்ளது. அது மட்டுமின்றி இந்த போட்டியில் பெற்ற வெற்றி மூலம் சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பையும் உறுதிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதிவரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசி பந்தில் தீபக் சாகர் அடித்த சிங்கிள் மூலம் சென்னை அணி த்ரில்லிங்கான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement