அஷ்வினை விட அவர்தான் பெஸ்ட். அவர்தான் டீம்ல விளையாடனும் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது 14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் அவர் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.

Ashwin

- Advertisement -

அதிலும் குறிப்பிட்ட அளவு ரன்களை விட்டுக் கொடுக்கும் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறுகிறார். இந்நிலையில் அஸ்வின் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான மஞ்ச்ரேக்கர் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை டெல்லியில் அஷ்வினை விட அமித் மிஸ்ரா தான் சிறப்பான ஸ்பின்னர்.

டி20 கிரிக்கெட்டில் அஷ்வின் சிறந்த பந்துவீச்சாளர் என்று கூற முடியாது. நான் ஒயிட் பால் கிரிக்கெட்டில் அவருடைய பெரியர் ரசிகன் கிடையாது. அஸ்வினை விட அமித் மிஸ்ரா சிறப்பாகவே பந்து வீசுவார். அவரது பந்து வீச்சில் நிச்சயம் விக்கெட்டுகள் விழுவது மட்டுமின்றி போட்டியின் முடிவையே மாற்றும் திறமை மிஸ்ராவிடம் உள்ளது.

ashwin 1

எனவே அமித் மிஸ்ராவுக்கு தான் டெல்லி அணி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் அஸ்வினை அவர்கள் பயன்படுத்தி வருவது ஏன் என்று புரியவில்லை என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஷ்வின் இடம் பெற்றுள்ளார். அஷ்வின் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இதனால் நிச்சயம் அவர் இடம்பெற மாட்டார் என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அஷ்வின் அணியில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement