எஞ்சிய ஐ.பி.எல் தொடரில் இவர்களின் ஆட்டத்தை பார்க்கவே ஆவலாக உள்ளேன் – விராட் கோலி கருத்து

Kohli
- Advertisement -

இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளை இரண்டாவது பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கவிருக்கும் இந்த இரண்டாவது பாதி ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் சிலர் பங்கேற்க மறுத்துவிட்டனர்.

ipl-2021

- Advertisement -

இதற்காக அனைத்து அணிகளும் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்து கொண்டனர். அந்த வகையில் பெங்களூரு அணியை சேர்ந்த கேன் ரிச்சர்ட்சன். ஆடம் ஜாம்பா, டேனியல் சாமிஸ், பின் ஆலன் ஆகியோர் இந்த தொடரில் விலகியுள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை பெங்களூரு அணி தேர்வு செய்துள்ளது.

அதன்படி ஜார்ஜ் கார்ட்டன், வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, டிம் டேவிட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து நாட்டின் சுற்றுப்பயணத்தில் இருந்த பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி துபாய் வந்தடைந்து தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் மாற்று வீரர்கள் குறித்து பேசியுள்ள விராட் கோலி கூறுகையில் :

RCB

எங்கள் அணியில் மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் நல்ல திறன் உடையவர்கள். நான் ஒவ்வொரு வீரரிடமும் தொடர்பில் இருந்தேன். கடந்த மாதத்தில் இருந்தே யார் இருக்கிறார்கள் ? யார் வெளியேறுகிறார்கள் ? என்பது குறித்து ஆலோசித்தோம். அந்த வகையில் முக்கிய வீரர்கள் வெளியேறிய நிலையில் தற்போது தரம்வாய்ந்த மாற்று வீரர்களை தேர்வு செய்துள்ளோம்.

இந்த இரண்டாவது பாதியில் அவர்களது திறனை காண ஆவலாக உள்ளேன். இங்குள்ள மைதானத்தின் சூழ்நிலைகளில் அவர்களால் சிறப்பாக செயல்படமுடியும். மொத்தமாக அணியுடன் இணைந்து முதல் பாதியில் விளையாடியது போன்று இரண்டாவது பாதியிலும் சிறப்பாக விளையாட காத்திருக்கிறேன் என கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement