வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அந்நாட்டிற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வங்கதேச அணி இந்த தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வங்கதேச அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி கேப்டன் குசால் பெரேராவின் அதிரடியான சதம் மூலம் 286 ரன்களை குவித்தது.

அதனைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இலங்கை அணியை சேர்ந்த பவுலர் சமீரா சிறப்பாக பந்துவீசி 16 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய வங்கதேச அணியின் கேப்டன் தமீம் இஃபாலின் போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு காரணம் யாதெனில் இந்த போட்டியின் போது இரண்டாவது பேட்டிங் செய்த வங்கதேச அணி 10 ஓவரில் சேசிங் செய்து கொண்டிருந்தது அப்போது இலங்கை வீரர் வீசிய பந்தில் அடிக்க முயன்ற தமீம் இக்பால் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார். ஆனாலும் பேட் தரையில் பட்டு என்று நினைத்த தமீம் இக்பால் அம்பயர் அவுட் கொடுத்ததும் அவரை நோக்கி தகாத வார்த்தையில் பேசினார். இருப்பினும் பந்து பேட்டில் பட்டு சென்றது தெளிவாகத் தெரிந்து அவுட் என்று அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஐசிசியின் விதிமுறைப்படி ஆர்டிகல் 2.3 நடைமுறையை அவர் மீறியதால் அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டது என ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் ஐசிசி வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து போட்டி முடிந்து பேசிய தமீம் இஃபால் கூறுகையில் நான் அவுட் என்று அறிவிக்கப்பட்ட பின் அப்செட் ஆக இருந்தேன். 100% பந்து பேட்டில் படவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் ரெவியூவின் போது அவுட் என்று தெரிந்ததும் சற்று வருத்தமாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். மேலும் போட்டி முடிந்ததும் தான் செய்தது தவறு என்றும் அவர் அம்பயரிடம் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.



