கொல்கத்தா அணிக்கு எதிரான எங்களது சிறப்பான வெற்றிக்கு காரணம் இதுதான் – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

Samson
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே குவித்தது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்த கொல்கத்தா அணியால் பெரிய ரன் குவிப்பை எடுக்கமுடியாமல் போனதே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

morgan

- Advertisement -

கொல்கத்தா அணி சார்பாக திரிபாதி 36 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 24 ரன்களை குவித்தார். அவர்களைத் தவிர வேறு யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. இதனை தொடர்ந்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியில் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமலும், மில்லர் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் கடந்த 4 – 5 போட்டிகளாக சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். நாங்கள் இன்றைய போட்டியில் பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணம் பந்துவீச்சு தான். எங்களது பவுலர்கள் சிறப்பாக பந்து வீசிவருவதால் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்த முடிந்தது. எனவே இவர்களை வைத்து நான் கேப்டைன்ஸி செய்வதும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

Sakariya

மோரிசை பொருத்தவரை எப்பொழுதும் அவர் போட்டியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதுமட்டுமின்றி பெரிய பெரிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற எண்ணமும் அவரிடம் இருந்து கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சஞ்சு சாம்சன் கூறினார். அதுமட்டுமின்றி தன்னுடைய பேட்டிங் பற்றி பேசிய அவர் கடந்த சில வருடங்களாகவே நான் சில விடயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன்.

miller

அதன்படி போட்டியில் அதிவேகமாக 50 ரன்களை அடித்து ஆட்டமிழப்பதை விட அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே இன்றைய போட்டியில் பொறுமையாக விளையாடி வெற்றி பெற வைத்தேன் என்று கூறினார். அதுமட்டுமின்றி அந்த அணியின் இளம் வீரரான சகாரியா சிறப்பாக பந்துவீசி வருவதாகவும் அவருடைய பயணம் இனியும் சிறப்பாக அமையும் என்றும் இனி வரும் போட்டிகளில் அவர் நிச்சயம் இதே போன்று நல்ல பந்து வீச்சை வெளிப்படுத்துவார் என்றும் சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement