இளம்வீரர் மீது தோனிக்கு ஏற்பட்ட அதிருப்தி. சி.எஸ்.கே அணியில் ஏற்படவுள்ள ஒரு மாற்றம் – விவரம் இதோ

CSK-1
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் மிக வலுவாக உள்ளது. குறிப்பாக அதனுடைய மிடில் ஆர்டர் வலுவாக உள்ள நிலையில் ஓபனிங் மட்டும் சொதப்பி கொண்டே வருகிறது. நட்சத்திர வீரர் டு பிளிசிஸ் சரியாக ஆடும் பட்சத்தில் அவருக்கு துணையாக களமிறங்கும் ருத்ராஜ் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார். இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளில் மொத்தமாக அவர் வெறும் 15 ரன்கள் மட்டும் தான் குவித்துள்ளார்.மேலும் வலைப்பயிற்சியின் போதும் அவர் அவ்வளவு பெரிய தாக்கத்தை மகேந்திர சிங் தோனி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகிய இருவருக்கும் ஏற்படுத்த தவறி விட்டார்.

Ruturaj

- Advertisement -

எனவே இனி அடுத்தடுத்த போட்டிகளில் ரிஸ்க் எடுக்க மகேந்திர சிங் தோனி விரும்பவில்லை என செய்திகள் கசிந்துள்ளன. எனவே அவருக்கு சிறு ஓய்வு கொடுக்க தோனி முடிவெடுத்துள்ளதார். அவருக்கு மாற்று வீரராக ராபின் உத்தப்பா இன்று விளையாட போகிறார். சமீபகாலமாக உள்ளூர் ஆட்டங்களில் மிக அதிரடியாக விளையாடி நல்ல பார்மில் ராபின் உத்தப்பா இருக்கிறார்.

எனவே அவரை ஓப்பனிங் வீரராக களம் இறக்க மகேந்திர சிங் தோனி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் முடிவு செய்துள்ளனர்.ராபின் உத்தப்பா முன்பே சென்னை அணிக்காக தோனி தலைமையில் விளையாட மிக ஆவலாக உள்ளதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

uthappa 1

அதேசமயம் ருத்துராஜ் இனி எந்த விதமான போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு வழங்க போவது இல்லை என கூறிவிட முடியாது. அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு வர சிறிது ஓய்வு காலம் தேவை. நிச்சயமாக அவர் பழைய ஃபார்முக்கு வந்தவுடன், மீண்டும் அவருக்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் இருந்து செய்திகள் வந்துள்ளன.

Uthappa

ராபின் உத்தப்பா இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக எப்படி விளையாடப் போகிறார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மிக ஆவலாக உள்ளனர். அதற்கு மிக முக்கிய காரணம் ராபின் உத்தப்பா இதற்கு முன்னதாக கொல்கத்தா அணியில் அதிக போட்டிகளில் விளையாடி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement