இந்த இடத்தில் மட்டும் தோனி என்ன இறக்கிவிட்டால் பொளந்து கட்டுவேன் – ராபின் உத்தப்பா அதிரடி

uthappa
- Advertisement -

ராபின் உத்தப்பா மிக நீண்ட வருடங்களாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் ஆவார். அவரது ஆட்டம் சரியாக இல்லாத காரணத்தினால் அவரை அந்த அணி 2019 ஆம் வருடம் வெளியேற்றி விட்டது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் ஆட தொடங்கினார்.
உத்தப்பா பழையபடி தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் சென்ற வருடமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ராபின் உத்தப்பா பெரிய இன்னிங்சை ஆடவில்லை.

Uthappa

- Advertisement -

இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணியிடம் இருந்து வாங்கி இருக்கிறது.இதைத்தொடர்ந்து இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் ஆட இருக்கிறார். சமீபத்தில் பேட்டியளித்த உத்தப்பா, நான் தோனியின் கீழ் டி20 அணியில் ஆடி இருக்கிறேன். 2004ஆம் ஆண்டு முதலே பழக்கம் ஆன நாங்கள் நேஷனல் கிரிக்கெட் அகடமியில் ஆடி இருக்கிறோம் அப்போதிலிருந்து எங்களுக்கு நல்ல நட்பு இருக்கிறது.

அந்த நட்பு குடும்ப ரீதியாகவும் வளர்ந்தது , நாங்கள் இருவரும் இப்போது குடும்ப ரீதியாக அடிக்கடி குடும்ப விசேஷங்கள் மற்றும் முக்கியதருணங்களில் அவர் குடும்பத்தோடு எங்கள் வீட்டிற்கு வருவதும் நாங்கள் குடும்பத்தோடு அவர் வீட்டுக்குப் போவதும் வழக்கமாகிவிட்டது. உத்தப்பா ஓபனராக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை இதுவரை அடித்திருக்கிறார்.

uthappa 1

ஓபனராக அவரது சராசரி ரன் ரேட் விகிதமும் 28 ஆகும். தற்பொழுது உள்ளூர் ஆட்டங்களில் சிறப்பாக ஆடிவரும் உத்தப்பா மீண்டும் ஓப்பனராக சிஎஸ்கே அணியில் ஆட விருப்பம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும் சிஎஸ்கே அணியில் பேச உள்ளதாகவும் , மேலும் தன்னை ஓபனிங் செய்ய அனுமதித்தால் தனது முழு பங்களிப்பை நிச்சயம் கொடுக்க உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

uthappa 1

நான் ஓப்பனிங் இடத்தில் களமிறங்கினால் என்னால் எனது அதிரடியை ,முழுவதுமாக வெளிப்படுத்த முடியும். அப்படி வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் எனது ஆட்டத்தின் மூலம் ரசிகர்களையும் மகிழ்விப்பேன் என்று உத்தப்பா கூறினார். உத்தப்பாவை ஓபனிங் இறக்கிவிட்டால் நிச்சயம் நன்றாக ஆடுவார் , பவர் பிளே ஓவர்களில் அவரது ஆட்டம் நிச்சயம் சென்னை அணிக்கு நிச்சயம் பலத்தை கூடுமென்று சில கிரிக்கெட் வல்லுனர்களும் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

Advertisement