ஒன்றுக்கும் உதவாதவன் நான் வருந்திய ஸ்டெய்ன். ரசிகர்களுடைய ரிப்ளை என்னனு பாருங்க – விவரம் இதோ

Steyn
- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டைன் தனது காலத்தில் வேகப்பந்து வீச்சு ராஜாவாக இருந்தவர். தற்போது அவருக்கு 37 வயது ஆகிவிட்டது. கடந்த ஐந்து வருடங்களாக காயத்தின் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இப்போது காயத்தில் இருந்து மீண்டு ஓரளவிற்கு ஆடினாலும் அந்த ஒரு சில போட்டிகளிலும் அவரால் சரியாக செயல்பட முடியவில்லை.

Steyn-1

- Advertisement -

மேலும் கடந்த மூன்று வருடங்களாக பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். பெரும்பாலும் போட்டிகளில் விளையாடாமல் டக்அவுட்டில் தான் இருந்தார். இந்த வருடம் மீண்டும் அந்த அணியில் இணைந்து கொண்டு முதலில் சில போட்டிகளில் ஆடினார். ஆனால் சரியாக விளையாட முடியவில்லை அவரது பந்துகள் நாலாபுறமும் பறக்கவிடப்பட்டது.

அதன் பின்னர் மீண்டும் சில போட்டிகளில் ஆடினார். இப்போதும் அவருக்கு இதே நிலைமை தான் தற்போது வரை ஐபிஎல் தொடரில் 70 பந்துகள் வீசி உள்ள அவரது ஓவரில் மட்டும் 133 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது.

Steyn

இப்படித்தான் இவரது நிலைமை தற்போது இருக்கிறது. இதன் காரணமாக ஏபி டிவிலியர்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த டேல் ஸ்டெய்ன் நான் எதற்குமே உதவாதவன் என்று கமெண்ட் செய்தார். அதனை பார்த்த ரசிகர்கள் அப்படி எல்லாம் இல்லை என்றால் நீங்கள் என்றுமே ராஜாதான் என்று அவருடைய பழைய சம்பவங்களை வைத்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

steyn

மேலும் அவர் 2015 ஆம் ஆண்டு சென்சூரியனில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் வீசிய பந்து ஸ்டம்பை இரண்டாக தகர்த்தது. அந்த புகைப்படத்தை பகிர்ந்து அவரை ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement